பெர்சப்பொலிஸ்
From Wikipedia, the free encyclopedia
பெர்சப்பொலிஸ் (Persepolis; பழைய பாரசீகம்: பார்சா (Pārśa),[2] பாரசீக மொழி: تخت جمشيد Takht-e Jamshid அல்லது پارسه பார்சே [Pārseh], "பாரசீகர்களின் நகர்" எனப் பொருள்படும்[3]) என்பது அகாமனிசியப் பேரரசின் சடங்குக்குரிய தலைநகரமாக (சுமார் கி.மு. 550–330) விளங்கியது. பெர்சப்பொலிஸ் ஈரானிய பார்ஸ் மாகாணத்தில் உள்ள சிராஸ் நகரிலிருந்து 60 km தூரம் வடகிழக்கில் அமைந்துள்ளது. ஆரம்ப பெர்சப்பொலிஸ் இடிபாடுகள் கி.மு. 515 ஆம் ஆண்டு காலத்துக்குரியன. இது அகாமனிசியப் பாணி கட்டடக்கலையின் முன்மாதிரியாக உள்ளது. 1979 இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் பெர்சப்பொலிஸ் இடிபாடுகளை உலகப் பாரம்பரியக் களம் என அறிவித்தது.[4]
விரைவான உண்மைகள் பெர்சப்பொலிஸ் پرسپولیس, இருப்பிடம் ...
பெர்சப்பொலிஸ் پرسپولیس | |
---|---|
அகாமனிசியப் பேரரசு அரசர்களின் அரச அரண்மனை | |
இருப்பிடம் | பார்ஸ் மாகாணம், ஈரான்[1] |
ஆயத்தொலைகள் | 29°56′04″N 52°53′29″E |
வகை | குடியிருப்பு |
வரலாறு | |
கட்டுநர் | முதலாம் டேரியஸ், மூன்றாம் அர்தசெராக்சஸ் |
கட்டுமானப்பொருள் | கல், மரம் |
கட்டப்பட்டது | கிமு. 6 ஆம் நூற்றாண்டு |
காலம் | அகாமனிசியப் பேரரசு |
கலாச்சாரம் | பாரசீகர் |
நிகழ்வுகள் | கட்டடத்திறப்புக் கொண்டாட்டம் |
பகுதிக் குறிப்புகள் | |
நிலை | இடுபாடு |
மேலாண்மை | ஈரானிய அரசாங்கம் |
பொது அனுமதி | திறந்துள்ளது |
அதிகாரபூர்வ பெயர்: Persepolis | |
வகை | கலாச்சாரம் |
அளவுகோல் | i, iii, vi |
வரையறுப்பு | 1979 (3 வது தொடர்) |
சுட்டெண் | 114 |
அரசு | ஈரான் |
பிராந்தியம் | ஆசியா பசுபிக் |
மூடு