பில் கேட்ஸ்
மைக்ரோசாப்ட் நிறுவனர், செல்வந்தர் / From Wikipedia, the free encyclopedia
வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.
விரைவான உண்மைகள் பில் கேட்ஸ், பிறப்பு ...
பில் கேட்ஸ் | |
---|---|
பிறப்பு | வில்லியம் ஹென்றி கேட்ஸ் III அக்டோபர் 28, 1955 (1955-10-28) (அகவை 68) சியாட்டில், வாஷிங்டன், அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கன் |
பணி | மைக்ரோசாஃப்ட் தலைவர் கார்பிஸ் தலைவர் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை தலைவர் பெர்க்ஷையர் ஹாத்வே இயக்குநர் தொடர் முதலீடு நிர்வாக இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1975–தற்போது |
சொத்து மதிப்பு | US$131பில்லியன் (2021 )[1] |
வாழ்க்கைத் துணை | மெலிண்டா கேட்ஸ் (தி. 1994) |
பிள்ளைகள் | 3 |
கையொப்பம் | |
வலைத்தளம் | |
Bill Gates |
மூடு