பசிலெயசு
From Wikipedia, the free encyclopedia
பசிலெயசு (Basileus, கிரேக்க மொழி: βασιλεύς (பைசாந்திய, தற்கால கிரேக்க உச்சரிப்புⓘ), பன்மை βασιλεῖς, basileis/பசிலெயிசு) என்ற கிரேக்கச் சொல் வரலாற்றில் பல்வேறு மன்னர்களுக்கான பட்டமாக இருந்துள்ளது. ஆங்கிலத்தில் இது பைசாந்தியப் பேரரசர்கள் பயன்படுத்திய பட்டமாக அறியப்பட்டாலும் வரலாற்றில் இது பண்டைக் கிரேக்கத்தில் இறைமையும் அதிகாரமும் உள்ள நபர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது; தற்கால கிரேக்க மன்னர்களுக்கும் இப்பட்டம் இருந்துள்ளது.
இதன் பெண்பாற் பெயராக பசிலிசா, பசிலெயா, பசிலெசு மற்றும் வழக்கொழிந்த பசிலின்னா என்பன உள்ளன.[1]