தி ஹெல்ப் (திரைப்படம்)
டேட் டெய்லர் தயாரித்த 2011ஆம் ஆண்டு அமேரிக்க திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
தி ஹெல்ப் என்பது 2011-ஆம் ஆண்டில் வெளியான ஆங்கிலத் திரைப்படம். இது கேத்ரின் ஸ்டாக்கெட் எழுதிய தி ஹெல்ப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்த நூலின் ஆசிரியையின் தோழராக இருந்த டேட் டெய்லர், இதன் இயக்குனர் ஆவார்.
தி ஹெல்ப் | |
---|---|
இயக்கம் | டேட் டெய்லர் |
தயாரிப்பு | கிறிஸ் கொலம்பஸ் மைக்கேல் பர்னதன் புருன்சன் கிரீன் |
மூலக்கதை | தி ஹெல்ப் (நூல்) |
திரைக்கதை | டேட் டெய்லர் |
இசை | தாமஸ் நியூமேன் |
நடிப்பு | ஜெசிகா சாஸ்டெய்ன் வியோல டேவிஸ் பிரைஸ் டல்லாஸ் அல்லிசன் ஜேன்னி ஒக்டேவியா சுபென்சர் எம்மா ஸ்டோன் |
ஒளிப்பதிவு | ஸ்டீபன் கோல்ட்பிளாட் |
படத்தொகுப்பு | ஹுயூக்ஸ் வின்போர்ன் |
கலையகம் | டச்ஸ்டோன் பிக்சர்ஸ் டிரீம் வொர்க்ஸ் பிக்சர்ஸ் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் பார்ட்டிசிபெண்ட் மீடியா இமேஜினேஷன் அபு தாபி 1492 பிக்சர்ஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | ஆகத்து 10, 2011 (2011-08-10) |
ஓட்டம் | 146 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | ஐஅ$25 மில்லியன் (₹178.8 கோடி)[1] |
மொத்த வருவாய் | ஐஅ$211.6 மில்லியன் (₹1,513.3 கோடி)[2] |
ஸ்கீட்டர் பிலன் என்ற ஆங்கிலேயப் பெண்ணுக்கு, அவளுடனான இரண்டு ஆப்பிரிக்க வேலைக்காரப் பெண்களுக்குமான தொடர்பைப் பற்றிய கதை. அந்த இரு பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை கதையாக எழுத நினைக்கிறாள், ஊடகவியலாளராகிய வெள்ளைக்காரப் பெண்மணி.
இந்த கதை அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் படமாக்கப்பட்டது. ஜெசிகா சாஸ்டெய்ன், எம்மா ஸ்டோன், வியோலா டேவிஸ், ஒக்டேவியா சுபென்சர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த துணை நடிகை, சிறந்த படப்பிடிப்பு, சிறந்த நடிகை ஆகிய விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றது. இது 2012 ஆம் ஆண்டிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதைப் பெற்றது.