சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (National University of Singapore) என்பது மாணவர் தொகை அடிப்படையில் சிங்கப்பூரின் மிகப் பெரிய பல்கலைக்கழகம் ஆகும். இது சிங்கப்பூர் நகரத்தின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஆசியாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாகும். இங்கு தமிழ்மொழி வகுப்புகளும் நடைபெறுகின்றன.
பல்கலைக்கழகத்தின் சின்னம் | |
வகை | தேசியப் பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1905 (1905) |
நிதிக் கொடை | சிங்கப்பூர் வெள்ளி 1.812 பில்லியன் (அமெரிக்க டாலரில் $1.48 பில்லியன்)[1] |
வேந்தர் | டோனி தன் |
தலைவர் | தன் சோர் சுவாங் |
கல்வி பணியாளர் | 2,402[2] |
பட்ட மாணவர்கள் | 26,418[2] |
அமைவிடம் | சிங்கப்பூர் , 1°17′44″N 103°46′36″E |
நிறங்கள் | |
இணையதளம் | www |
புக்கிட் திமா வளாகத்தில் பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு இயங்குகிறது. லீ குவான் யீ வளாகத்தில் பொதுக் கொள்கைப் பள்ளியும் ஆராய்ச்சி நிலையங்களும் அமைந்துள்ளன. டியூக் மருத்துவக் கல்லூரி அவுற்றாம் வளாகத்தில் அமைந்துள்ளது.
பிரித்தானியாவின் முன்னாள் அதிபர் டோனி பிளேர், தன் பிளேர் அறக்கட்டளை சார்பாக வழங்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு, இப்பல்கலைக்கழகத்தை ஆசிய நம்பிக்கையின் தலைமையகமாகக் கருதினார். ஐக்கிய ராச்சியத்தின் டுராம் பல்கலைக்கழகமும் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகமும் இத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டன.[3].. 2012ஆம் ஆண்டில், இப்பல்கலைக்கழகம் உலகின் 25வது சிறந்த பல்கலைக்கழகம் எனவும், ஆசியாவில் இரண்டாவது எனவும் தெரிவித்துள்ளது ஆய்வொன்று.[4] 1980ஆம் ஆண்டில், சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தையும், நான்யாங் பல்கலைக்கழகத்தையும் இணைத்து சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இரு பல்கலைக்கழகங்களின் வளங்களையும் இணைத்து ஆங்கிலத்தை சிங்கப்பூரின் முதன்மை மொழியாக்கும் சிங்கப்பூர் அரசின் எண்ணத்தின் வெளிப்பாடே இப்பல்கலைக்கழகம். நான்யாங் பல்கலைக்கழகத்தின் சின்னத்தில் இருந்த மூன்று பின்னிப் பிணைந்த வளையங்கள் இப்பல்கலைக்கழகத்தின் சின்னத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. [5]