சமாரா
From Wikipedia, the free encyclopedia
சமாரா (Samara, உருசியம்: Сама́ра), 1935 முதல் 1991 வரை குய்பீசெவ், Куйбышев), என்பது உருசியாவின் ஒரு நகரமும், சமாரா மாகாணத்தின் நிருவாக மையமும் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில் இது உருசியாவின் ஆறாவது பெரிய நகரம் ஆகும்.[8] இது ஐரோப்பிய உருசியாவின் தென்கிழக்கே வோல்கா மற்றும் சமாரா ஆறுகளின் சந்தியில் அமைந்துள்ளது. இந்நகரின் மேற்கு எல்லையாக வோல்கா ஆறு உள்ளது. ஆற்றின் அடுத்த கரையில் சிகூலி மலைகள் உள்ளன. வடக்கு எல்லையில் சோக்கோலி மலைகளும், தெற்கு மற்றும் கிழக்கே தெப்புவெளிகளும் காணப்படுகின்றன. நகரின் நிலப்பரப்பு 46,597 எக்டேர்கள் ஆகும். மக்கள்தொகை: 1,164,685 (2010).
சமாரா
Самара | |
---|---|
நகரம்[1] | |
ஆள்கூறுகள்: 53°12′10″N 50°08′27″E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | சமாரா மாகாணம்[2] |
நிறுவிய ஆண்டு | 1586[3] |
நகரம் status since | 1688[4] |
அரசு | |
• நிர்வாகம் | சமாரா நகரசபை[5] |
• முதல்வர்[6] | எலேனா லப்பூச்கினா[6] |
பரப்பளவு | |
• மொத்தம் | 541.382 km2 (209.029 sq mi) |
ஏற்றம் | 100 m (300 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 11,64,685 |
• மதிப்பீடு (2018)[9] | 11,63,399 (−0.1%) |
• தரவரிசை | 2010 இல் 6வது |
• அடர்த்தி | 2,200/km2 (5,600/sq mi) |
நிர்வாக நிலை | |
• கீழ்ப்பட்டவை | city of oblast significance of Samara[2] |
• Capital of | சமாரா மாகாணம்,[2] வோல்சுக்கி மாவட்டம்[1] |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | சமாரா நகர வட்டம்[10] |
• Capital of | சமாரா நகர வட்டம்,[10] வோல்ஸ்கி மாநகர மாவட்டம்[11] |
நேர வலயம் | ஒசநே+4 ([12]) |
அஞ்சல் குறியீடு(கள்)[13] | 443XXX |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 846[14] |
OKTMO குறியீடு | 36701000001 |
இணையதளம் | city |
சோவியத் ஒன்றியத்தின் ஆட்சியில் சமாரா ஒரு மூடிய நகராக இருந்தது. தற்போது இது ஐரோப்பிய உருசியாவின் ஒரு முக்கிய அரசியல், வணிக, தொழிற்துறை, கலாசார மையமாக உள்ளது. 2007 மே மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய—உருசிய உச்சி மாநாடு இங்கு நடைபெற்றது. இந்நகரம் கோடை காலத்தில் மிகவும் வெப்பமாகவும், குளிர் காலத்தில் மிகவும் குளிரான காலநிலையும் நிலவுகின்றன.
சமாரா 2018 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை நடத்த்தத் தெரிவான உருசியாவின் 11 நகரங்களில் ஒன்றாகும். இங்கு நான்கு குழுநிலை ஆட்டங்களும், ஒரு 16-சுற்று ஆட்டமும், ஒரு காலிறுதி ஆட்டமும் நடைபெறவிருக்கின்றன. அனைத்து ஆட்டங்களும் இங்கு புதிதாக அமைக்கப்பட்ட கொசுமசு அரங்கில் நடைபெறும்.