எகபடனா
From Wikipedia, the free encyclopedia
எகபடனா (Ecbatana) பண்டைய அண்மை கிழக்கின், தற்கால வடமேற்கு ஈரானின் சக்ரோசு மலைத்தொடரில் அமைந்த பண்டைய அண்மை கிழக்கின் நகரங்களில் ஒன்றாகும். இதனை அகமதானா அல்லது ஹன்மதானா (Hagmatāna or Haŋmatāna) என்றும் அழைப்பர்.[1] யூதர்களின் இலக்கியப் படி, எகபடானா என்பதற்கு ஒன்றுகூடுமிடம் எனப்பொருளாகும்.
எகபடனா ஹமதான் | |
---|---|
ஈரானின் எகபடனா தொல்லியலில் களத்தில் கண்டெடுக்கப்பட்ட, அகாமனிசியப் பேரரசு காலத்திய தங்கக் குடுவை | |
இருப்பிடம் | எகப்படானா தொல்லியல் நகரம், அமாதான் மாகாணம், ஈரான் |
பகுதி | சக்ரோசு மலைத்தொடர் |
ஆயத்தொலைகள் | 34°48′23″N 48°30′58″E |
வகை | நகரம் |
எகபடானா நகரம், முன்னர் மீடியாப் பேரரசில் இருந்தது. எகபடனா மலையின் தொல்லியல் மேட்டை ஹமதான் என்று கருதப்படுகிறது.[2]
கிரேக்க வரலாற்று மற்றும் புவியியல் அறிஞரான எரோடோட்டசு, கிமு எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எகபடானா நகரம், மீடியாப் பேரரசின் தலைநகரமாக விளங்கியது என்கிறார்.[2] மலைப்பாங்கான பகுதியில் அமைந்த எகபதானா நகரம், பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசர்களின் கோடைக்கால வாழ்விடமாக விளங்கியது. பின்னர் இந்நகரம் பார்த்தியப் பேரரசின் தலைநகரமாகவும், நாணயங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்கூடங்களாகவும் விளங்கியது.
பாரசீகப் பேரரசில் செல்வச் செழிப்பு மிகுந்த எகபடானா நகரம், கிழக்கு - மேற்கு ஆசிய நகரங்களை இணைக்கும் பாலமாக திகழ்ந்தது.[3] கிமு 330ல் பேரரசர் அலெக்சாண்டரின் ஆணையின் படி, அவரது படைத்தலைவர்களில் ஒருவரான பார்மேனியன் எகபடானாவில் கொல்லப்பட்டார்.[2]