அஞ்சனா வாசன்
From Wikipedia, the free encyclopedia
அஞ்சனா வாசன் (Anjana Vasan, பிறப்பு: 31 சனவரி 1987)[1] என்பவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நடிகையும், பாடகியும் படலாசிரியையும் ஆவார். தமிழரான இவர் இலண்டனில் வாழ்ந்து வருகிறார்.[2] மேடை நாடகப் பணிகளுக்காக அறியப்படும் இவர், லாரன்சு ஆலிவர் விருதை வென்றுள்ளார்,[3] அத்துடன் சேனல் 4 நகைச்சுவைத் தொடரான "வீ ஆர் லேடி பார்ட்ஸ்" இல் நடித்தமைக்காக பிரித்தானிய அகாடமி தொலைக்காட்சி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்.
விரைவான உண்மைகள் அஞ்சனா வாசன், பிறப்பு ...
அஞ்சனா வாசன் | |
---|---|
2017 இல் அஞ்சனா | |
பிறப்பு | 31 சனவரி 1987 (1987-01-31) (அகவை 37) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (இளங்கலை) ராயல் வெல்சு இசை, நாடகக் கல்லூரி (முதுகலை) |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று |
மூடு