ஹோ சி மின் (Hồ Chí Minh, 19 மே 1890 – 2 செப்டம்பர் 1969) வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர்,[1] பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அரசுத்தலைவராகவும் (1946–1969) இருந்தவர்.[2]

விரைவான உண்மைகள் ஹோ சி மின், வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1-ஆவது அரசுத்தலைவர் ...
ஹோ சி மின்
Thumb
அண்.1946 இல் ஹோ சி மின்
வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1-ஆவது அரசுத்தலைவர்
பதவியில்
2 செப்டம்பர் 1945  2 செப்டம்பர் 1969
முன்னையவர்பாவோ தாய் (மன்னர்)
பின்னவர்தோன் தூக் தாங்
வியட்நாம் தொழிலாளர் கட்சியின் தலைவர்
பதவியில்
19 பெப்ரவரி 1951  2 செப்டம்பர் 1969
பொதுச் செயலாளர்
  • துரோங் சின்
  • இலே துவான் (பதில்)
முன்னையவர்பதவி நிறுவப்பட்டது
பின்னவர்பதவி ஒழிக்கப்பட்டது
வியட்நாம் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளர்
பதவியில்
5 அக்டோபர் 1956  10 செப்டம்பர் 1960
முன்னையவர்துரோங் சின்
பின்னவர்இலே துவான்
வியட்நாம் சனநாயகக் குடியரசின் 1-ஆவது பிரதமர்
பதவியில்
2 செப்டம்பர் 1945  20 செப்டம்பர் 1955
முன்னையவர்திரான் துரோங் கிம் (வியட்நாம் பேரரசின் பிரதமராக)
பின்னவர்பாம் வான் தோங்
வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
28 ஆகத்து 1945  2 மார்ச் 1946
முன்னையவர்திரான் வான் தோங்
பின்னவர்நியூவென் தோங் தாம்
பதவியில்
3 நவம்பர் 1946  மார்ச் 1947
முன்னையவர்நியூவென் துவோங் தாம்
பின்னவர்கோவாங் மின் கியாம்
வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுவுடைமைக் கட்சியின் அரசாயத்தின் முழு உறுப்பினர்
பதவியில்
31 மார்ச் 1935  2 செப்டம்பர் 1969
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
நியூவென் சின் குங்

(1890-05-19)19 மே 1890
கிம் லியேன், பிரெஞ்சு இந்தோசீனா
இறப்பு2 செப்டம்பர் 1969(1969-09-02) (அகவை 79)
ஹனோய், வடக்கு வியட்நாம்
இளைப்பாறுமிடம்ஹோ சி மின் நினைவகம், ஹனோய்
தேசியம்வியட்நாமியர்
அரசியல் கட்சிவியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி (1924 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
  • தொழிலாலர் அகிலத்தின் பிரெஞ்சப் பகுதி (1919–1921)
  • பிரெஞ்சுக் கம்யூனிஸ்டுக் கட்சி (1921–1925)
துணைவர்தாங் துயேத் மின் (தி. 1926; பிரிவு)
பெற்றோர்
  • நியூவென் சின் சாக் (தந்தை)
  • ஒவாங் தீ லோன் (தாய்)
முன்னாள் கல்லூரிபொதுவுடைமைப் பல்கலைக்கழகம்
வேலை
  • அரசியல்வாதி
  • புரட்சியாளர்
  • சமையல்காரர்
கையெழுத்துThumb
மூடு

ஹோ வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் (Saigon) நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெயர்

பிறப்பில் இவர் பெயர் நியூவென் சின் சுங் (Nguyen Sinh Cung). ஹோ சி மின் என்பது இவரின் இரகசியப் பெயர். அதாவது 1942-ல் வியட்னாம் விடுதலையடையும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் ஹோ சி மின் புனைப் பெயர் கொண்டு‍ அழைக்கப்பட்டார். இப்படி பல இரகசியப் பெயர்கள் இவருக்கு இருந்தன. ஜனாதிபதியாக ஆகும் வரை இவர் தலைமறைவில் வாழ்ந்து வந்தார். சுமார் 50 வித்தியாசப்பட்ட இரகசியப் பெயர்கள் உண்டு‍ என நம்பப்படுகிறது‍.

பிறப்பு

ஹோ சி மின் மத்திய வியட்னாமில் அமைந்துள்ள சிறிய மாகாணத்தில் பிறந்திருக்கலாம். பிற்பாடு தனது பிறப்புச் சான்றிதழில் வித்தியாசப்பட்ட தகவலைக் கொண்டு தலைமறைவில் வாழ்ந்து வந்தார். 1894-1903 காலப்பகுதிகளைத் தனது பிறப்பு ஆண்டாகப் பத்திரங்களில் கொடுத்தாலும், அதிகாரப்பூர்வமாக 1890 எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சில ஆய்வாளர்களால் ஒத்துக்கொள்ளப்படுவது இல்லை.

அவரின் பிறந்த நாளும்கூட சரிவரத் தெரியவில்லை. பொதுவாக வியட்னாம் உருவாக்கப்பட்ட மே 19 ஆம் தேதி அவரின் பிறந்த நாள் என நம்பப்படுகிறது. கிராமப்புறத்தில் பிறப்புத் தகவல் சேமிப்பு இல்லாதபடியால் ஹோ சி மின் தனது பிறப்புத் தேதி தெரியாதவராக இருந்து இருக்கலாம்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.