![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ce/Star_wars2.svg/langta-640px-Star_wars2.svg.png&w=640&q=50)
ஸ்டார் வார்ஸ்
From Wikipedia, the free encyclopedia
ஸ்டார் வார்ஸ் (Star Wars) என்பது அமெரிக்க நாட்டை சேர்ந்த ஜோர்ச் லூகாஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட விண்வெளி சாகச உரிம காவியமாகும். இதன் முதல் உரிமத் திரைப்படம் 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் 1977 ஆம் ஆண்டு மே 25 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இது உலகளாவிய அளவில் பரவலான கலாச்சார தாக்கத்தை உருவாக்கியது. ஸ்டார் வார்ஸ் திரைப்படத் தொடர்பான தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ப்பட ஆட்டங்கள், நாவல்கள், வரைகதை புத்தகங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உட்பட பல்வேறு பிற ஊடகங்களில் இந்த உரிமம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
![]() | |
படைத்தவர் | ஜோர்ச் லூகாஸ் |
---|---|
அசல் வேலைப்பாடுகள் | ஸ்டார் வார்ஸ் (1977) |
உரிமையாளர் | லூகாஸ்பிலிம் |
திரைப்படங்கள் | நேரடி திரைப்படங்கள்
இயங்குபடம்
|
2020 ஆம் ஆண்டில் இதன் மொத்த மதிப்பு 70 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டது. இது தற்போது எல்லா நேரத்திலும் அதிக வருமானம் ஈட்டிய திரைபடத் தொடர்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இதுவரைக்கும் ஒன்பது படங்களும் அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன, முதல் இரண்டு படங்களுக்கும் விருதுகள் கிடைத்தன.