வெள்ளைப்பூண்டு
ஒரு செடியினம், உருப்படி Q21546392ஐ இதன் தரவுகளுக்குப் பார்க்கவும் / From Wikipedia, the free encyclopedia
பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்பது வெங்காய இனத் தாவரத்தைக் குறிக்கும்.
விரைவான உண்மைகள் வெள்ளைப் பூண்டு, உயிரியல் வகைப்பாடு ...
வெள்ளைப் பூண்டு | |
---|---|
Allium sativum, known as garlic, from William Woodville, Medical Botany, 1793. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Asparagales |
குடும்பம்: | வெங்காயக் குடும்பம் |
பேரினம்: | வெங்காயச் சாதி |
இனம்: | A. cepa |
இருசொற் பெயரீடு | |
Allium cepa லி. | |
மூடு
கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.
வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.[சான்று தேவை] பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். சித்த மருத்துவத்தில் இலசுனம் என அழைக்கப்படுகிறது. மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துக் கொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.