சாம்பல் காட்டுக்கோழி அல்லது சாம்பல் கானாங்கோழி ( grey junglefowl) (Gallus sonneratii) என்பது ஒரு காட்டுக்கோழி ஆகும். இவை பெரும்பாலும் தென்னிந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படுகின்றன ஆணும் பெண்ணும் நாட்டுக்கோழி போல இருக்கும். சேவலுக்கு உடலின் மேற்பாகத்தில் வெள்ளைக் கோடுகள் இருக்கும். வால் அரிவால் போன்ற தோற்றத்தில் ஒளிரும் கரிய நிறத்தில் இருக்கும். பெட்டைக் கோழிகள் உடல் மேல்பாகம் பாக்கு நிறத்திலும், அடிப்பகுதி கருமை கலந்த வெள்ளையாவும் இருக்கும். இவற்றின் நிறத் தோற்றமானது காடுகள், முட்புதர்களுக்குள் ஒளிந்து கொள்ள உதவியாக இருக்கிறன. இவை காட்டுப் பகுதிகள், திறந்தவெளிகள், புல்வெளியற்ற அடர்ந்த காட்டுப் பகுதிகளில் வாழும் இயல்பு கொண்டவை. பெரும்பாலும் தரைப்பகுதியில் தங்களது நேரத்தைக் கழித்தாலும் எதிரிகளிடமிருந்து தப்புவதற்காக மரங்களின் மேல் பறந்து தாவக்கூடியன.

விரைவான உண்மைகள் சாம்பல் காட்டுக்கோழி, காப்பு நிலை ...
சாம்பல் காட்டுக்கோழி
Thumb
பந்திப்பூர் தேசியப் பூங்காவில் சேவல்
Thumb
தட்டக்காடு பறவைகள் காப்பகத்தில் ஒரு கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Phasianidae
துணைக்குடும்பம்:
Phasianinae
பேரினம்:
இனம்:
G. sonneratii
இருசொற் பெயரீடு
Gallus sonneratii
Temminck, 1813
Thumb
இப்பறவை வாழும் பகுதியைக் காட்டும் படம்
மூடு

இந்த கோழிகள் பெப்ரவரி முதல் மே மாதம் வரை முட்டையிடும். 4 முதல் 7 முட்டைகளையிட்டு அடைகாக்கும். 20 முதல் 21 நாட்களுக்குள் குஞ்சுகள் பொரிந்து வெளிவரும். இதனைப் பெட்டைக் கோழிகள் பராமரிக்கும். சேவல்கள் பொதுவாக 860 - 1,250 கிராம் வரையிலும், பெட்டைக் கோழிகள் 560 - 620 கிராம் எடை வரையிலும் வளரக்கூடியவை. இவை 5 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியவை.

காட்டுக் கோழிகளின் உணவு விதைகள் என்றாலும் இவை பூச்சிகளையும் உண்ணக்கூடியன குறிப்பாக இதன் குஞ்சுகளுக்கு உணவாகத் தரும் இவை, காடுகளில் விதை முளைப்புக்கும், பரவலுக்கும் பெருமளவில் உதவுகின்றன. இடம்பெயரும் குணம் இல்லாத காட்டுக் கோழிகள் அழியும் தருவாயில் உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வரை நடந்த ஆய்வின்படி முன்பு இருந்த காட்டுக் கோழிகளில் 30 சதவீதம் அழிந்துவிட்டதாக பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ளது.[2]

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.