![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Erode_City_Road_Schematic2.jpg/640px-Erode_City_Road_Schematic2.jpg&w=640&q=50)
வெளி வட்டச் சாலை, ஈரோடு
From Wikipedia, the free encyclopedia
ஈரோடு வெளி வட்டச்சாலையானது (Outer Ring Road) தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, ஈரோடு மாவட்டத்தின் ஈரோடு மாநகரைச் சுற்றிச்செல்லும் அரைவட்ட புறவழிச்சாலைத் திட்டமாகும். இத்திட்டமானது, ஈரோடு மாநகரில் நிலவி வரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது. ஈரோட்டிலிருந்து துவங்கவும், முடியவும் செய்யும் பல்வேறு நெடுஞ்சாலைகளை ஈரோடு மாநகருக்கு வெளியில் இணைக்கும் விதத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் வெளி வட்டச்சாலை, ஈரோடு, வழித்தட தகவல்கள் ...
வெளி வட்டச்சாலை, ஈரோடு | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
நீளம்: | 32 km (20 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 2004 – present |
வரலாறு: | 15 கி.மீ. தெற்கு பகுதி திறக்கப்பட்டுள்ளது |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கொக்கராயன்பேட்டை |
To: | சித்தோடு |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | ஈரோடு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
மூடு
இது நகரின் மையப்பகுதியிலிருந்து 8 முதல் 10 கி.மீ. ஆரத் தொலைவில் இணைக்கிறது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d9/Erode_City_Road_Schematic2.jpg/640px-Erode_City_Road_Schematic2.jpg)