From Wikipedia, the free encyclopedia
விளாடிமர் இகோரெவிசு ஆர்னோல்ட் (Vladimir Igorevich Arnold 12 ஜூன் 1937 – 3 ஜூன் 2010[1]) உருசிய கணிதவியலாளராவர். மாசுகோ மாநில பல்கலைக்கழக மாணவராக இருந்த போதே கணித கோட்பாடுகளை நிறுவிக் காட்டினார். படிப்பை முடித்துக் கொண்டபின் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இவர் நகைச்சுவையாகப் பேசுவதிலும் வல்லவர். இவர் இறந்த பொழுது உருசிய அதிபர் கூறியது :
ஆர்னோல்டு இறந்தது ஒரு துக்க செய்தியாகும். இவரால் கணிதத் துறை முன்னேறியுள்ளது. நமது நாட்டிற்கே பெருமை சேர்த்த இவரை, இவரது சாதனையை அறிந்த ஒவ்வொருவர் நினைவிலும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
விளாடிமிர் ஆர்னோல்ட் | |
---|---|
விளாடிமிர் ஆர்னோல்ட் - 2008 | |
பிறப்பு | ஒடெசெ, சோவியத் யூனியன் | 12 சூன் 1937
இறப்பு | 3 சூன் 2010 72) பாரிசு, பிரான்சு | (அகவை
தேசியம் | சோவியத் யூனியன் உருசியர் |
துறை | கணிதம் |
கல்வி கற்ற இடங்கள் | மாஸ்கோ மாநில பல்கலைக்கழகம் |
ஆய்வு நெறியாளர் | Andrey Kolmogorov |
முனைவர் பட்ட மாணவர்கள் | Alexander Givental Askold Khovanskii Boris Shapiro Alexander Varchenko |
அறியப்படுவது | Arnold's cat map Arnold conjecture Arnold's rouble problem KAM theorem |
இவர் பல விருதுகளால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.1982ஆம் ஆண்டு இவருக்கு உலூயிசு நைரன்பர்கு என்பவருடன் சேர்த்து இவர்கள் நேரிலா வகைக்கெழுச் சமன்பாடுகளின் கோட்பாட்டுக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காக கிராஃபோர்டு பரிசு வழங்கப்பட்டது. 1981 இல் இவர் பெயர் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளுக்கு (10031 Vladarnolda) இடப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.