விஜய் பாலாஜி இயக்கத்தில் 2018இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
விதி மதி உல்டா (Vithi Mathi Ulta) விஜய் பாலாஜி இயக்கத்தில், ரைட் மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ்த்திரைப்படம். கனவில் கெட்டதாகக் கண்டது உண்மையில் நடக்கக்கூடாது என்று நாயகன் களத்தில் இறங்கும் கதையே விதி மதி உல்டா.[1] இத்திரைப்படத்தில் ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அஸ்வின் விநாயகமூர்த்தியின் இசையில், மார்ட்டின் ஜோவின் ஒளிப்பதிவில், கோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பில் 2018இல் தமிழில் வெளிவந்துள்ள முதல் திரைப்படம்.[2]
விதி மதி உல்டா | |
---|---|
இயக்கம் | விஜய் பாலாஜி |
தயாரிப்பு | ரமீஸ் ராஜா |
இசை | அஸ்வின் விநாயகமூர்த்தி |
நடிப்பு | ரமீஸ் ராஜா ஜனனி ஐயர் டேனியல் பாலாஜி கருணாகரன் |
ஒளிப்பதிவு | மார்ட்டின் ஜோ |
படத்தொகுப்பு | புவன் சீனிவாசன் |
கலையகம் | ரைட் மீடியா ஒர்க்ஸ் |
வெளியீடு | 05 சனவரி 2018 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பின்வரும் நடிக நடிகையர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்[2]
ஈஎஸ்பி எனப்படும் வருங்காலத்தை உணர்தல் என்னும் தன்மையை அடிப்படையாகக் கொண்ட கதை.[3] ரமீஸ் ராஜாவின் கனவில் நடந்தவை அப்படியே நடப்பு வாழ்க்கையில் நடக்கத் தொடங்குகிறது. தன்னைப்பிறர் கடத்துவது, தன் காதலி கடத்தப்படுவது, அம்மா, அப்பா கொலை செய்யப்படுவது இவை அனைத்தையும் தெரிந்து கொண்ட கதைநாயகன் இவற்றையெல்லாம் தடுத்தாரா இல்லையா, என்ன நடந்தது என்பதே படத்தின் விறுவிறுப்பான கதை.[4]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.