விக்கிப்பீடியா:கட்டுரையை விரிவாக்குவது எப்படி?
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகள் குறித்த கூடுதல் தகவல் அறிவீரா? அவற்றை நீங்களே சேர்க்க முடியும். ஆம்! பின்வரும் எளிய வழிமுறைகள் மூலம் கட்டுரைகளை விரிவாக்கலாம்!!
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/7/71/Edit_box.png/640px-Edit_box.png)
- கட்டுரைப் பக்கத்தின் மேல் உள்ள "தொகு" எனும் பொத்தானை அழுத்துங்கள்.
- தற்போது அந்தக் கட்டுரைக்கான தொகுப்புப் பக்கம் (மின்மடல் அனுப்பும் பெட்டி போல்) பார்வைக்குக் கிடைக்கும். இந்தத் தொகுப்புப் பக்கத்தில் கட்டுரைக்கான உரைநடைப் பகுதி இருக்கும். அதில் தாங்கள் அறிந்த கூடுதல் தகவலைச் சேருங்கள். தக்க சான்றுடன் தகவலைச் சேர்க்க வேண்டும். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையைத் தமிழாக்கியும் எழுதலாம்.
- கட்டுரையை மேம்படுத்திய பின், அப்பெட்டியின் கீழ் உள்ள இப்பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானை அழுத்துங்கள்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/1/15/Save_box.png/640px-Save_box.png)
- தாங்கள் செய்த மேம்பாடுகளுடன் கட்டுரை சிறப்பாகக் காட்சியளிக்கும்.
- கட்டுரைகள் விரிவாக அமைய நீங்களும் உதவலாமே?