![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Lepton.png/640px-Lepton.png&w=640&q=50)
மென்மி
From Wikipedia, the free encyclopedia
மென்மி, அல்லது லெப்டான், அல்லது லெப்டோன் (Lepton) என்பது அணுக்கூறான அடிப்படைத் துகள்கள் சிலவற்றின் பொதுக் குடும்பப்பெயர். எதிர்மின்னி (எலக்ட்ரான்), மியூவான், டௌவான் (டௌ துகள்), மற்றும் இத் துகள்களின் நியூட்ரினோக்களும் (நுண்நொதுமிகளும்) மென்மிகள் அல்லது லெப்டான்கள் எனப்படும் அடிப்படைத் துகள் வகையைச் சேர்ந்தவை ஆகும். இந்த மென்மிகள் யாவும் தற்சுழற்சி எண் 1⁄2 கொண்டவை. பெர்மியான்கள் அல்லது (ஃவெர்மியான்கள்) தற்சுழற்சி எண் 1⁄2 கொண்டவை. இந்த மென்மிகள் அல்லது லெப்டான்கள் அணுக்கருவின் உள்ளே இயங்கும் அணுக்கரு வன்விசையை போல் வலுவான விசையுடன் இயங்குபவை அல்ல. மென்மிகள் உறவியக்க விசை, அணுக்கரு வன்விசையைக் காட்டிலும் ஏறத்தாழ 1013 மடங்கு மெலிவானது (10 டிரில்லியன் மடங்கு குறைந்த வலுவுடைய விசை).
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Lepton.png/320px-Lepton.png)