கொழுமியம் (Lipid) என்பது, கொழுப்புகள், எண்ணெய்கள், மெழுகுகள், கொலஸ்டிரால், ஸ்டெரால்கள், கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் மானோகிளிசரைடுகள், டைகிளிசரைடுகள், பாஸ்போகொழுமியங்கள் போன்ற கொழுப்பில் கரையக்கூடியவையும், இயற்கையில் கிடைப்பனவுமான மூலக்கூறுகளைக் குறிக்கும். ஆற்றலைச் சேமித்து வைப்பதும், முக்கிய கொழுமிய சமிக்ஞை மூலக்கூறுகளாகவும், உயிரணு (கல) மென்தகடுகளுக்கான அமைப்புக் கூறுகளாகவும் இருப்பதுமே கொழுமியங்களின் முக்கியமான செயல்பாடுகளாகும்[3][4]. ஒப்பனை மற்றும் உணவுப் பொருட்கள் தயாரிப்பதிலும், நுண்ணுட்பத் தொழில்நுட்பத்திலும் கொழுமியங்கள் பெருமளவுப் பயன்படுகின்றன[5].

Thumb
பொதுவான சில கொழுமியங்களின் வேதிவடிவங்கள். படத்தில் மேலேயுள்ளது கொலஸ்டிரால்[1] மற்றும் ஒலெயிக் அமிலம்[2]. நடுவில் உள்ளது கிளிசரால் அடிதளத்துடன் இணைக்கப்பட்ட ஓலேயோயில், ஸ்டியரோயில், பால்மிடோயில் தொடரிகளைக் கொண்ட டிரைகிளிசரைடு. கீழே உள்ளது பாஸ்போகொழுமியம், பாஸ்படைடில் கோலின்

கொழுமியங்களைப் பொதுவாக நீர் விலக்கும் அல்லது இருநிலை விரும்பும் சிறு மூலக்கூறுகள் என வரையறை செய்யலாம். கொழுமியங்களின் இருநிலை விரும்பும் பண்பானது சிலக் கொழுமியங்களை நீர்மயமானச் சூழலில் மெல்லிய சவ்வுகள், புடகங்கள் (vesicles) அல்லது இலைப்போசோம்கள் வடிவங்களாக உருபெறுவதற்கு வழிவகுக்கின்றது. உயிரியல்-சார்ந்த கொழுமியங்கள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ கீட்டோ-அசைல், ஐசோப்பிரீன் என்ற இரண்டு வெவ்வேறு வகை உயிர்வேதியியல் துணையலகுகள் அல்லது கட்டுறுப்புத் தொகுதிகளால் தொடங்கப்படுகின்றன[3]. இந்த அணுகுமுறையைப் பின்பற்றி கொழுமியங்களைக் கொழுப்பு அமிலங்கள், கிளிசரோக்கொழுமியங்கள் கிளிசரோபாசுபோக்கொழுமியங்கள், இஸ்பிங்கோக்கொழுமியங்கள், சாக்கரோக்கொழுமியங்கள், பல்கீட்டைடுகள் (கீட்டோ-அசைல் துணையலகுகள் சுருக்கும் வினைக்குட்படுவதால் உருவாக்கப்படுபவை), இஸ்டீரால் கொழுமியங்கள், பிரனோல் கொழுமியங்கள் (ஐசோப்பிரீன் துணையலகுகள் சுருக்கும் வினைக்குட்படுவதால் உருவாக்கப்படுபவை) என எட்டு வகைகளாகப் பிரிக்கலாம்[3].

கொழுமியத்தின் வகைப்பாடுகள்

கொழுப்பு அமிலங்கள்

கொழுப்பு அமிலங்கள், அல்லது கொழுப்பு அமிலத்தின் மீதங்கள் கொழுப்பு அமில தொகுப்பு எனப்படும் செயல்முறை மூலம் அசிட்டைல்- CoA உடன் மெலோனைல்-CoA அல்லது மெதில்மெலோனைல்-CoA தொகுதிகளை முன்தொடராகக் கொண்ட சங்கிலித் தொடர் நீட்சியாக்கத்தினால் கொழுப்பு அமில தொகுப்பு எனப்படும் செயல்முறை மூலம் தயாரிக்கப்பட்ட வேறுபட்ட மூலக்கூறுகளின் தொகுதியாகும்.[6][7] இவை ஐதரோகார்பன் சங்கிலி யால் ஆக்கப்பட்டு கார்பாக்சிலிக் அமில தொகுதியை இறுதியில் கொண்டும் இருக்கிறது. இந்த அமைப்பு மூலக்கூறில் வேதியியல் முனைவுறுதன்மை யையும், நீர் நாட்டம் உடைய முனை ஒன்றும் மற்றும் முனைவுறா, நீர் நாட்டம் உடைய நீரில் கரையாத மற்றொரு முனையையும் கொண்டுள்ளது. கொழுப்பு அமிலத்தின் அமைப்பானது அடிப்படையான உயிரியல் கொழுமிய வகைப்பாட்டில் ஒன்றாக உள்ளது. மேலும், கொழுப்பு அமிலங்களின் இந்த அமைப்பானது, சிக்கலான கொழுமியங்களின் அடிப்படைக் கட்டுமான அலகாக உள்ளது. கார்பன் சங்கிலியானது 4 முதல் 24 கார்பன் அணுக்கள் வரை நீளம் உடையவையாகவும் [8] நிறைவுற்ற சேர்மங்களாகவும் மற்றும் நிறைவுறாத சேர்மங்களாகவும், ஆக்சிசன், உப்பீனிகள், நைட்ரசன், மற்றும் கந்தகம் ஆகியவற்றைக் கொண்டுள்ள வினைசெயல் தொகுதி களுடன் இணைக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். ஒரு கொழுப்பு அமிலமானது இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருந்தால் அது சிஸ் மாற்றியத்தையோ அல்லது டிரான்ஸ் மாற்றியத்தையோ (வடிவியல் மாற்றியம்) கொண்டிருக்க வாய்ப்புள்ளது இந்த மாற்றிய அமைப்பு மூலக்கூறின் அமைப்பினை குறிப்பிடத்தக்க அளவுக்கு பாதிக்கிறது.சிஸ்-இரட்டைப் பிணைப்புகள் கொழுப்பு அமிலங்களின் சங்கிலித் தொடரை அதிக இரட்டைப் பிணைப்பகள் கொண்ட தொடருடன் இணைக்கப்பட்ட ஒரு விளைவான வளையும் தன்மைக்குக் காரணமாக இருக்கிறது. 18 கார்பன் அணுக்களின் தொடரைக் கொண்ட லினோலெனிக் அமிலமானது தன்னகத்தே மூன்று இரட்டைப் பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தாவரங்களின் “தைலக்காய்டு படலங்களில்” மிகுதியாகக் காணப்படும் கொழுப்பு அமில-அசைல் தொடரான இது (லினோலெனிக் அமிலம்) சுற்றுப்புறத்தில் எவ்வளவு குறைவான வெப்பநிலை இருந்தாலும் கூட மிக அதிகமான பாயும் தன்மையை (fluidity) இதன் காரணமாகவே கொண்டுள்ளது.[9] மேலும், பசுங்கணிகங்களின் உயர் பிரிகை 13-C NMR நிறமாலையில் லினோலெனிக அமிலத்திற்கு மற்றவற்றைக் காட்டிலும் அதிகப்படியான கூர்மையான உச்சிகள் காணப்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது. இந்தப் பண்பு செல் படலங்களின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது.[10] இயற்கையில் காணப்படும் கொழுப்பு அமிலங்களில் மிகுதியானவை ”சிஸ்” வகையாக உள்ளன. இருப்பினும், சில இயற்கையான மற்றும் பகுதியளவு ஐதரசனேற்றம் செய்யப்பட்ட கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களில் “ட்ரான்சு” வகையும் காணப்படுகின்றன.[11] உயிரியல் வழியல் முக்கியமான கொழுப்பு அமிலங்கள் அரசிடோனிக் அமிலத்திலிருந்து பெறப்பட்ட எய்கோசனாய்டுகள் மற்றும் எய்கோசபென்டேனோயில் அமிலத்திலிருந்து பெறப்பட்ட, ப்ரோஸ்டாக்லான்டின்கள், லியுக்கோட்ரையீன்கள், மற்றும் திராம்போக்சேன்கள் ஆகியவற்றை உள்ளடக்கியவை ஆகும். டோகோசாஎக்சேனோயிக் அமிலம் கூட குறிப்பாக பார்வை தொடர்பான உயிரியல் அமைப்புகளில் முக்கியமானதாகும்.[12][13] கொழுமிய வகைகளில், கொழுப்பு அமிலங்கள் தொகுதியில் காணப்படும் மற்ற முக்கிய பிரிவுகள் கொழுப்பு அமில எஸ்தர்கள் மற்றும் கொழுப்பு அமில அமைடுகள் ஆகும். கொழுப்பு அமில் எஸ்தர்கள் முக்கியமான உயிர்வேதியியல் இடைநிலைப் பொருட்களான மெழுகு எஸ்தர்கள், கொழுப்பு அமில தயோ எஸ்தர் துணைநொதி A வழிப்பொருட்கள், கொழுப்பு அமில தயோ எஸ்தர் ACP வழிப்பொருட்கள் மற்றும் கொழுப்பு அமில கார்னிடைன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும். கொழுப்பு அமில அமைடுகள், கேன்னாபினாய்டு நியூரோட்ரான்சுமிட்டர் அனன்டடைடு போன்ற N-அசைல்எதனாலமீன்களை உள்ளடக்கியுள்ளன.[14]

கிளிசெரோகொழுமியங்கள்

ஒற்றை(mono-) , இரட்டை(di-) மற்றும் மும்மை(tri-) பதிலியிடப்பட்ட கிளிசெரால்களால் உருவானவையே கிளிசெரோகொழுமியங்கள் ஆகும்.[15]ட்ரைகிளிசெரைடுகள் எனப்படுபவை நன்கு அறியப்பட்ட கொழுப்பு அமில கிளிசெரால் ட்ரைஎஸ்டர்களாகும். ”மும்மைஅசைல்கிளிசெரால்” என்கின்ற வார்த்தை சில நேரங்களில் ”மும்மை கிளிசெரைடுகள்” என்ற வார்த்தையுடன் ஒரு பொருள் தரக்கூடிய வார்த்தையாக உள்ளது. இத்தகைய சேர்மங்களில், கிளிசெராலின் மூன்று ஐதராக்சி தொகுதிகளும் ஒவ்வொன்றும் வெவ்வேறு கொழுப்பு அமிலங்களால் எஸ்டராக்கப்பட்டுள்ளன. ஏனெனில் இந்தக் கொழுமியங்கள் விலங்குத் திசுக்களில் கொழுப்பை சேமித்து வைக்கும் ஆற்றல் கிடங்குகளாக செயல்படுகின்றன. கொழுப்பின் வளர்சிதை மாற்றத்தில் அடிப்போசு திசு விலிருந்து மும்மைகிளிசெரைடுகளின் எஸ்டர் பிணைப்புகள் நீராற்பகுப்படைந்து கிளிசெரால் மற்றும் கொழுப்பு அமிலங்களைத் தரும் வினையே தொடக்க நிலையாகும்.[16]

கிளிசேரோகொழுமியங்களின் கூடுதல் துணைப்பிரிவுகள் கிளைகோசைல் கிளிசெரால்களாகும். இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஒற்றை சர்க்கரைகள் கிளிசெராலுடன் கிளைகோசைடிக் பிணைப்பின் மூலமாக இணைக்கப்பட்டிருக்கும் பண்பினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. இந்த வகை அமைப்பைக் கொண்டிருக்கும் கிளைகோசைல்கிளிசெரால்களுக்கான எடுத்துக்காட்டு தாவர சவ்வுகளில் காணப்படும் டைகேலக்டோடைஅசைல் கிளிசெரால் [17] மற்றும் பாலுாட்டிகளின் விந்தணுக்களில் காணப்படும் செமினோகொழுமியம் ஆகியவை ஆகும்.[18]

கிளிசெரால்பாஸ்போகொழுமியங்கள்

Thumb
பாஸ்பாடிடைல்எதனாலமீன்

கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள், வழக்கமாக பாஸ்போகொழுமியங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை செல்களின் கொழுமிய ஈரடுக்கின் ஆக்கக்கூறாக, இயற்கையில் எங்கும் காணப்படுகின்ற ஒன்றாக உள்ளன.[19] இவை வளர்சிதைமாற்றம் மற்றும் செல் சமிக்ஞை ஆகியவற்றிலும் பங்கேற்கின்றன.[20] நரம்புத் திசுக்கள் (மூளைத்திசு உட்பட) ஒப்பீட்டளவில் அதிக கிளிசெரோபாஸ்போகொழுமியங்களைக் கொண்டுள்ளன. இவற்றின் இயைபில் ஏற்படும் மாறுபாடு நரம்பியல் தொடர்பான ஒழுங்கின்மை மற்றும் குறைபாடுகள் ஏற்படக் காரணமாக இருக்கின்றன.[21] கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் கிளிசெரால் மூலச்சட்டகதத்தில் sn-3 இடத்தில் காணப்படும் தலைமைத்தொகுதியின் முனைவுறுதன்மையைப் பொறுத்து வேறுபட்ட தனித்த மேலும் பல உட்பிரிவுகளாக வகுக்கப்படலாம்.

இஸ்பிங்கோகொழுமியங்கள்

Thumb
இஸ்பிங்கோமையலின்

இஸ்பிங்கோகொழுமியங்கள் சிக்கலான குடும்ப வகையைச் சேர்ந்த சேர்மங்கள் ஆகும்.[22] செரின் அமினோ அமிலம் மற்றும் நீண்ட சங்கிலித்தொடர் கொண்ட கொழுப்பு அசைல் ஆகியவற்றிலிருந்து டி நோவோ தொகுப்பு முறையின்படி தயாரிக்கக்கூடிய பொதுவான அமைப்பியல் வடிவத்தைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய இஸ்பிங்காய்டு அடித்தளம் மற்றும் முக்கியச்சட்டகம் கொண்ட சேர்மங்களை செராமைடுகள், பாஸ்போஸ்பிங்கோகொழுமியங்கள் மற்றும் இதர சேர்மங்களாக மாற்றப்பட்ட பிறகு கிடைப்பவையாகும்.

இஸ்டீரோகொழுமியங்கள்

இஸ்டீரோகொழுமியங்களான கொலஸ்டிரால் மற்றும் அதன் வழிப்பொருட்களானவை சவ்வு வகை கொழுமியங்களின் கிளிசெரோபாஸ்போகொழுமியங்கள் மற்றும் இஸ்பிங்கோமையலின்கள் ஆகியவற்றுடன் இணைந்த மற்றுமொரு முக்கியமான பகுதிப்பொருட்களாகும்[23]

பிரினால்கொழுமியங்கள்

Thumb
பிரினால்கொழுமியம் (2E-கெரனியால்)

பிரினால் கொழுமியங்களானவை மெவலோனிக் அமிலம் (MVA) வழியாக தயாரிக்கப்பட்ட ஐந்து-கார்பன் அலகு முன்னோடிகளான ஐசோபென்டெனைல் டைபாஸ்பேட் மற்றும் டைமெதில்அல்லைல் டைபாஸ்பேட் ஆகியவற்றிலிருந்து தொகுப்புமுறையில் தயாரிக்கப்பட்டவையாகும். எளிய ஐசோப்ரீனாய்டுகள் (நேரியல் ஆல்ககால்கள், டைபாஸ்பேட்டுகள், மற்றும் பிற.) C5 அலகுகளின் தொடர் சேர்க்கை வினைகளால் உருவாக்கப்பட்டு, டெர்பீன் அலகுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படும். 40 கார்பன் அணுக்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில் உள்ள அமைப்புகள் பாலிடெர்பீன்கள் என அழைக்கப்படுகின்றன. கெரோட்டினாய்டுகள் ஆக்சிசனேற்ற எதிர்ப்பிகளாக செயல்படக்கூடிய மற்றும் வைட்டமின் A யின் முன்னோடியாகவும் உள்ள முக்கியமான எளிய ஐசோப்ரீனாய்டுகள் ஆகும்.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.