லோவ்லினா போர்கோஹைன்
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
லோவ்லினா போர்கோஹைன் (Lovlina Borgohain (பிறப்பு: 2 அக்டோபர் 1997) இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கோலாகாட் நகரத்தைச் சேர்ந்த பெண் குத்துச்சண்டை வீராங்கனை ஆவார். இவர் 2020-ஆம் ஆண்டில் அருச்சுனா விருது வென்றார்.[1][2]இவர் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைப் போட்டியில் பெண்கள் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை நாடின் அபெர்ட்ஸ் மற்றும் தைவான் நாட்டின் சென் நயின் சிங்கை வென்று பதக்கப் பட்டியலில் இடம் பெற்றார்.[3][4][5]