![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Rudraprayag_in_Uttarakhand_%2528India%2529.svg/langta-640px-Rudraprayag_in_Uttarakhand_%2528India%2529.svg.png&w=640&q=50)
ருத்திரபிரயாகை மாவட்டம்
உத்தரகாண்டத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
ருத்திரபிரயாகை மாவட்டம் (Rudraprayag district), (இந்தி: रुद्र प्रयाग जिला), வடஇந்தியாவின் இமயமலையில் சிவாலிக் மலைத்தொடரில் அமைந்த உத்தராகண்டம் மாநிலத்தின் பதிமூன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் பரப்பளவு 2439 சதுர கிலோ மீட்டராகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் ருத்திரபிரயாகை நகராகும்.
விரைவான உண்மைகள் ருத்ரபிரயாக் மாவட்டம் रुद्र प्रयाग जिला, நாடு ...
ருத்ரபிரயாக் மாவட்டம்
रुद्र प्रयाग जिला | |
---|---|
மாவட்டம் | |
![]() | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தராகண்டம் |
கோட்டம் | கார்வால் |
தலைமையிடம் | ருத்திரபிரயாகை |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,984 km2 (766 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,42,285 |
• அடர்த்தி | 120/km2 (300/sq mi) |
இணையதளம் | http://rudraprayag.nic.in |
மூடு
இம்மாவட்டத்தின் வடக்கில் உத்தரகாசி மாவட்டம், கிழக்கில் சமோலி மாவட்டம், தெற்கில் பௌரி கார்வால் மாவட்டம் மற்றும் மேற்கில் டெக்ரி கார்வால் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
ருத்ரபிரயாக் மாவட்டத்தின் வடக்கில் உலகப் புகழ் பெற்ற கேதார்நாத் கோயில் அமைந்துள்ளது. மந்தாகினி ஆறு ருத்திரபிரயாகையில் பாய்கிறது.