![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Dr._Robert_H._Goddard_-_GPN-2002-000131.jpg/640px-Dr._Robert_H._Goddard_-_GPN-2002-000131.jpg&w=640&q=50)
இராபர்ட் காடர்ட்
From Wikipedia, the free encyclopedia
இராபர்ட் ஹட்சின்ஸ் காடர்ட் (Robert Hutchings Goddard, அக்டோபர் 5, 1882 - ஆகஸ்ட் 10, 1945) ஒரு அமெரிக்க அறிவியலாளர், இயற்பியல் வல்லுநர், பேராசிரியர் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்பாளர் ஆவார். இன்றைய ராக்கெட் அறிவியல் பங்களிப்பாளர்களில் இவர் மிக முக்கியமானவர். ராக்கெட் அறிவியலின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார். இன்றைய உலகில் பயன்படுத்தப்படும் திரவ எரிபொருள் ராக்கெட்டைக் (Liquid Fueled Rockets) கண்டுபிடித்த பெருமைக்குரியவர் இவர். இவரது ஆராய்ச்சியின் பகுதியாக, 1926 மார்ச் 16 அன்று இவரது குழுவினர் செலுத்திய ராக்கெட்டே வெற்றிகரமாக செலுத்தப்பட்ட முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டாகும். காடர்ட் மற்றும் அவரது குழுவினர் 1926க்கும் 1941க்கும் இடையிலாக மொத்தம் 34 ராக்கெட்டுகளை செலுத்தியுள்ளனர். அவற்றில் சில அதிக உயரமாக 2.6 கி.மீ ( 1.6 மைல்) -க்கும், அதிக வேகமாக 885 கி.மீ/மணிக்கும் (மணிக்கு 550 மைல் ) பறக்கக்கூடியனவாக இருந்தன.
இராபர்ட் காடர்ட் Robert H. Goddard | |
---|---|
![]() | |
பிறப்பு | (1882-10-05)அக்டோபர் 5, 1882 வூஸ்ட்டர், மாசசூசெட்ஸ் |
இறப்பு | ஆகத்து 10, 1945(1945-08-10) (அகவை 62) பால்ட்டிமோர், மேரிலாந்து |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | வூல்ஸ்ட்டர் பாலிடெக்னிக் கல்விக்கழகம், கிளார்க் பல்கலைக்கழகம் |
பணி | பேராசிரியர், ராக்கெட் அறிவியலாலர், இயற்பியலாளர், கண்டுபிடிப்பாளர் |
அறியப்படுவது | முதலாவது திரவ எரிபொருள் ராக்கெட்டைக் கண்டுபிடித்தமை |
பெற்றோர் | ஃபானி லூயிஸ் ஒயிட், நாஹும் காடர்ட் |
வாழ்க்கைத் துணை | எஸ்தர் கிஸ்க் |
பிள்ளைகள் | எவருமில்லை |