நடுவண் மாவட்டங்கள் (federal districts, உருசியம்: федера́льные округа́, பெதரால்னியே ஓக்ருகா) என்பவை உருசியாவின் are groupings of the நடுவண் அலகுகளின் குழுக்களைக் குறிக்கும்.
நடுவண் மாவட்டங்கள் நாட்டின் நிருவாக அலகுகள் அல்ல, ஆனால் நடுவண் அரசின் அமைப்புகளினால் இலகுவாக நிருவகிப்பதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு நடுவண் மாவட்டமும் பல நடுவண் நிருவாக அலகுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் உருசிய அரசுத்தலைவரின் சிறப்புத் தூதுவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நடுவண் மாவட்டங்கள் உருசிய அரசுத்தலைவரால் "அவரது அரசியலமைப்பு அதிகாரத்தை செயல்படுத்துவதற்கென" 2000 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டன.[1] சிறப்புத் தூதுவர் அரசுத்தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசுத்தலைவரின் நிருவாக ஊழியர்களாகக் கருதப்படுகிறார்கள்.
நடுவண் மாவட்டங்களின் பட்டியல்
நடுவண் மாவட்டம்[2] | நிறுவப்பட்ட நாள் |
பரப்பு (கிமீ²) |
மக்கள்தொகை (2010) |
நடுவண் அலகுகள் |
நிருவாக மையம் |
கண்டம் | |
---|---|---|---|---|---|---|---|
மத்திய | மே 18, 2000 | 652,200 | 38,438,600 | 18 | மாஸ்கோ | ஐரோப்பா | |
தெற்கு | மே 18, 2000 | 427,800 | 16,141,100 | 8 | தொன்-மீது-ரஸ்தோவ் | ஐரோப்பா | |
வடமேற்கு | மே 18, 2000 | 1,687,000 | 13,583,800 | 11 | சென் பீட்டர்ஸ்பேர்க் | ஐரோப்பா | |
தூரகிழக்கு | மே 18, 2000 | 6,952,600 | 8,371,257 | 11 | காபரோவ்ஸ்க் | ஆசியா | |
சைபீரியா | மே 18, 2000 | 4,361,800 | 17,178,298 | 10 | நொவசிபீர்ஸ்க் | ஆசியா | |
யூரால் | மே 18, 2000 | 1,818,500 | 12,082,700 | 6 | யெக்கத்தரின்பூர்க் | ஐரோப்பாவும் ஆசியாவும் | |
வோல்கா | மே 18, 2000 | 1,037,000 | 29,900,400 | 14 | நீசினி நோவகோரத் | ஐரோப்பா | |
வடக்கு காக்கசியம் | சனவரி 19, 2010 | 170,400 | 9,496,800 | 7 | பியாத்திகோர்ஸ்க் | ஐரோப்பா |
மூலம்:[3]
குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.