ரஷ்யாவின் கூட்டுக்குடியரசு 83 ஆட்சிப்பிரிவுகளைக் கொண்டவை. இந்த 83 ஆட்சிப்பிரிவுகளில் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவிற்கும் சமமான உரிமைகள் உண்டு. ஒவ்வொரு ஆட்சிப்பிரிவில் இருந்தும் இரண்டு இரண்டு சார்பாளர்கள் வீதம் ரஷ்யக் கூட்டரசு மன்றத்தில் (ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவையில்) பங்கு கொள்வார்கள். ஆனால் இந்த ஆட்சிப்பிரிவின் தன்னாட்சித் தன்மைகளில் வேறுபாடுகள் உண்டு.
ரஷ்ய கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் வகைகள்
கூட்டரசின் ஒவ்வொரு ஆட்சிப்பிரிவும் கீழ்க்கண்ட பிரிவு வகைகளின் ஏதேனும் ஒரு வகைப் பிரிவில் அடங்கும்:
21 உட்குடியரசுகள் (республики, ஒருமை. республика; respubliki, ஒருமை. respublika)—ஒவ்வொரு உட்குடியரசும் தன்னாட்சியுடையது. ஒவ்வொன்றுக்கும் ஒரு அரசியல் சட்டம், நாடாளுமன்றம், உட்குடியரசுத் தலைவர் உண்டு. வெளிநாட்டு உறவுகள் முதலிவற்றிற்கு ரஷ்ய கூட்டரசு பொறுப்பேற்கும். இக்குடியரசுகள் பெரும்பாலும் ஒவ்வொரு குறிப்பிட்ட இனங்களின் தாய்நிலங்களாகக் கருதப்படுகின்றன. | |
46 ஓப்லாஸ்துகள் (மாநிலங்கள்) (области, ஒருமை. область; ஓப்லாஸ்தி, ஒருமை ஓப்லாஸ்து)— இது பொதுவாகவும் பரவலாகவும் காணப்படும் ஆட்சிப்பிரிவு வகை. இவ் ஆட்சிப்பிரிவுக்கு ரஷ்ய கூட்டரசில் இருந்து அமர்த்தப்படும் ஆளுநர் ஒருவரும், இப்பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கொண்ட சட்டமன்றம் உண்டு. இந்த ஆட்சிப் பிரிவில் உள்ள மிகப்பெரிய நகரத்தின் பெயரால் பெரும்பாலும் இந்த ஓப்லாஸ்து அழைக்கப்படும். | |
9 கிராய்கள் (ஆட்சிப்பகுதிகள்) (края, ஒருமை. край; கிரயா (kraya), ஒருமை. கிராய் (krai)—இது பெரும்பாலும் ஓப்லாஸ்து போன்றதே. இவை ஒரு காலத்தில் எல்லைப்பகுதிகள் என்று கருதியதால் ஆட்சிப்பகுதிகள் (territories) என்று அழைக்கப்பட்டன. | |
1 தன்னாட்சி ஓப்லஸ்து (தன்னாட்சி மாநிலம்) (автономная область; ( யூத தன்னாட்சி ஓப்லாஸ்து) | |
4 தன்னாட்சி ஓக்குருகுகள் (okrugs) (தன்னாட்சி மாவட்டங்கள்) (автономные округа, ஒருமை. автономный округ; avtonomnyye okruga, ஒருமை. avtonomny okrug)—ஓப்லாஸ்துகளைவிட அதிக தன்னாட்சி உரிமைகள் கொண்டவை ஆனால் குடியரசுகளை விட குறைவான தன்னாட்சி உரிமைகள் கொண்டவை. பெரும்பாலும் பெரும்பான்மையும் ஓரின மக்கள் கொண்டதாக இருக்கும். | |
2 கூட்டரசின் நேரடி நகரங்கள் (கூட்டரசின் நேரடி ஆட்சியில் இயங்கும் நகரங்கள்) (федеральные города, ஒருமை. федеральный город; ஃவெடரால்ன்யெ 'கொரோடா (federalnyye goroda), ஒருமை. ஃவெடர்லால்னி 'கோரோ'ட் (federalny gorod)—தனி ஆட்சிப்பகுதிகளாக இயங்கும் பெரிய நகரங்கள். |
கூட்டரசின் ஆட்சிப்பிரிவுகளின் பட்டியல்
குறியீடு | பெயர் | தலைநகர் அல்லது நிருவாக மையம் பெரிய நகரம் | கொடி | சின்னம் | கூட்டாட்சி மாவட்டங்கள் | பொருளாதாரப் பகுதிகள் | பரப்பளவு (கிமீ²)[1] | மக்கள்தொகை[2] |
---|---|---|---|---|---|---|---|---|
01 | அடிகேயா குடியரசு | மாய்க்கொப் | தெற்கு | வாட கவ்காஸ் | 7,600 | 447,109 | ||
02 | பாஷ்கொர்டொஸ்தான் குடியரசு | ஊஃபா | வொல்கா | உரால்ஸ் | 143,600 | 4,104,336 | ||
03 | புரியாத் குடியரசு | உலான் ஊடே | சைபீரியா | கிழக்கு சைபீரியா | 351,300 | 981,238 | ||
04 | அல்த்தாய் குடியரசு | கோர்னோ-அல்த்தாயிஸ்க் | சைபீரிய | மேற்கு சைபீரியா | 92,600 | 202,947 | ||
05 | தாகெஸ்தான் குடியரசு | மக்கச்கலா | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 50,300 | 2,576,531 | ||
06 | இங்குசேத்தியக் குடியரசு | தலைநகர்: மகாஸ் பெரும் நகரம்: நசரான் |
தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 4,000 | 467,294 | ||
07 | கபர்தினோ-பல்கரீயா குடியரசு | நால்ச்சிக் | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 12,500 | 901,494 | ||
08 | கல்மீக்கியா குடியரசு | எலீஸ்ட்டா | தெற்கு | வொல்கா | 76,100 | 292,410 | ||
09 | கரச்சாய் செர்க்கேசியக் குடியரசு | செர்க்கேஸ்க் | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 14,100 | 439,470 | ||
10 | கரேலியா குடியரசு | பெத்ரசவோத்ஸ்க் | வடமேற்கு | வடக்கு | 172,400 | 716,281 | ||
11 | கோமி குடியரசு | சிக்தீவ்க்கர் | வடமேற்கு | வடக்கு | 415,900 | 1,018,674 | ||
12 | மாரி எல் குடியரசு | யோசுக்கார்-ஓலா | வொல்கா | வொல்கா-வியாத்கா | 23,200 | 727,979 | ||
13 | மர்தோவியா குடியரசு | சரான்ஸ்க் | வொல்கா | வொல்கா-வியாத்கா | 26,200 | 888,766 | ||
14 | சாக்கா (யாக்குத்தியா) குடியரசு | யாக்குத்ஸ்க் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 3,103,200 | 949,280 | ||
15 | வடக்கு ஒசேத்திய-அலனீயா குடியரசு | விளாடிகவ்க்காஸ் | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 8,000 | 710,275 | ||
16 | தத்தர்ஸ்தான் குடியரசு | கசான் | வொல்கா | வொல்கா | 68,000 | 3,779,265 | ||
17 | துவா குடியரசு | கிசில் | சைபீரியா | கிழக்கு சைபீரியா | 170,500 | 305,510 | ||
18 | உத்மூர்த் குடியரசு | இசேவ்ஸ்க் | வொல்கா | உரால்ஸ் | 42,100 | 1,570,316 | ||
19 | ஹக்காசியா குடியரசு | அபக்கான் | சைபீரியா | கிழக்கு சைபீரியா | 61,900 | 546,072 | ||
20 | செச்சினியக் குடியரசு | குரொஸ்னி | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 15,300 | 1,103,686 | ||
21 | சுவாஷ் குடியரசு | செபோக்சாரி | வொல்கா | வொல்கா-வியாத்கா | 18,300 | 1,313,754 | ||
22 | அல்த்தாய்-கிராய் | பார்னோல் | சைபீரியா | மேற்கு சபீரியா | 169,100 | 2,607,426 | ||
92 | சபாய்க்கால்ஸ்கி கிராய் | சிட்டா | சைபீரியா | கிழக்கு சைபீரியா | 431,500 | 1,155,346 | ||
91 | கம்ச்சாத்கா கிராய் | பெத்ரொபாவ்லவ்ஸ்க்-கம்ச்சாத்கி | தூரகிழக்கு | தூரகிழக்கு | 472,300 | 358,801 | ||
23 | கிராஸ்னதார் கிராய் | கிராஸ்னதார் | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 76,000 | 5,125,221 | ||
24 | கிராஸ்னயார்ஸ்க் கிராய் | கிராஸ்னயார்ஸ்க் | சைபீரியா | கிழக்கு சைபீரியா | 2,339,700 | 2,966,042 | ||
90 | பேர்ம் கிராய் | பேர்ம் | வொல்கா | யூரல்ஸ் | 160,600 | 2,819,421 | ||
25 | பிரிமோர்ஸ்கி கிராய் | விளாடிவஸ்தோக் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 165,900 | 2,071,210 | ||
26 | ஸ்தாவ்ரப்போல் கிராய் | ஸ்தாவ்ரப்போல் | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 66,500 | 2,735,139 | ||
27 | கபாரொவ்ஸ்க் கிராய் | கபாரொவ்ஸ்க் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 788,600 | 1,436,570 | ||
28 | அமூர் ஓப்லஸ்து | பிளாகொவெஸ்சென்ஸ்க் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 363,700 | 902,844 | ||
29 | அர்காங்கெல்ஸ்க் ஓப்லஸ்து | அர்காங்கெல்ஸ்க் | வடமேற்கு | வடக்கு | 587,400 | 1,336,539 | ||
30 | அஸ்திரகான் ஓப்லஸ்து | அஸ்திரகான் | தெற்கு | வொல்கா | 44,100 | 1,005,276 | ||
31 | பெல்கோரத் ஓப்லஸ்து | பெல்கோரத் | மத்திய | மத்திய கரும் கிழக்கு | 27,100 | 1,511,620 | ||
32 | பிரயான்ஸ்க் ஓப்லஸ்து | பிரயான்ஸ்க் | மத்திய | மத்திய | 34,900 | 1,378,941 | ||
33 | விளாடிமிர் ஓப்லஸ்து | விளாடிமிர் | மத்திய | மத்திய | 29,000 | 1,523,990 | ||
34 | வொல்ககிராத் ஓப்லஸ்து | வொல்ககிராத் | தெற்கு | வொல்கா | 113,900 | 2,699,223 | ||
35 | வொலக்தா ஓப்லஸ்து | நிர்வாக மையம்: வொலக்தா பெரிய நகரம்: செரப்போவெத்ஸ் |
வடமேற்கு | வடக்கு | 145,700 | 1,269,568 | ||
36 | வரனியொஷ் ஓப்லஸ்து | வரனியொஷ் | மத்திய | மத்திய கரும்பூமி | 52,400 | 2,378,803 | ||
37 | இவனோவா ஓப்லஸ்து | இவனோவா | மத்திய | மத்திய | 21,800 | 1,148,329 | ||
38 | இர்க்கூத்ஸ்க் ஓப்லஸ்து | இர்க்கூத்ஸ்க் | சைபீரியா | கிழக்கு சைபீரியா | 767,900 | 2,581,705 | ||
39 | கலினின்கிராத் ஓப்லஸ்து | கலினின்கிராத் | வடமேற்கு | கலினின்கிராத் | 15,100 | 955,281 | ||
40 | காலுகா ஓப்லஸ்து | காலுகா | மத்திய | மத்திய | 29,900 | 1,041,641 | ||
42 | கெமெரோவா ஓப்லஸ்து | நிர்வாக மையம்: கெமெரோவா பெரிய நகரம்: நோவகுஸ்னெத்ஸ்க் |
சைபீரியா | மேற்கு சைபீரியா | 95,500 | 2,899,142 | ||
43 | கீரொவ் ஓப்லஸ்து | கீரொவ் | வொல்கா | வொல்கா-வியாத்கா | 120,800 | 1,503,529 | ||
44 | கொஸ்த்ரோமா ஓப்லஸ்து | கொஸ்த்ரோமா | மத்திய | மத்திய | 60,100 | 736,641 | ||
45 | கூர்கன் ஓப்லஸ்து | கூர்கன் | யூரல்ஸ் | யூரல்ஸ் | 71,000 | 1,019,532 | ||
46 | கூர்ஸ்க் ஓப்லஸ்து | கூர்ஸ்க் | மத்திய | மத்திய கரும்பூமி | 29,800 | 1,235,091 | ||
47 | லெனின்கிராத் ஓப்லஸ்து | [3]பெரிய நகரம்: காத்ச்சினா |
வடமேற்கு | வடமேற்கு | 84,500 | 1,669,205 | ||
48 | லிப்பெத்ஸ்க் ஓப்லஸ்து | லிப்பெத்ஸ்க் | மத்திய | மத்திய கரும்பூமி | 24,100 | 1,213,499 | ||
49 | மகதான் ஓப்லஸ்து | மகதான் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 461,400 | 182,726 | ||
50 | மாஸ்கோ ஓப்லஸ்து | [4]பெரிய நகரம்: பலசிக்கா |
மத்திய | மத்திய | 45,900 | 6,618,538 | ||
51 | மூர்மன்ஸ்க் ஓப்லஸ்த் | மூர்மன்ஸ்க் | வடமேற்கு | வடக்கு | 144,900 | 892,534 | ||
52 | கீழ் நொவ்கோரத் ஓப்லஸ்த் | கீழ் நோவ்கோரத் | வொல்கா | வொல்கா-வியாத்கா | 76,900 | 3,524,028 | ||
53 | நொவ்கோரத் ஓப்லஸ்து | விலீக்கி நோவ்கோரத் | வடமேற்கு | வடமேற்கு | 55,300 | 694,355 | ||
54 | நொவசிபீர்ஸ்க் ஓப்லஸ்து | நொவசிபீர்ஸ்க் | சைபீரியா | மேர்கு சைபீரியா | 178,200 | 2,692,251 | ||
55 | ஓம்ஸ்க் ஓப்லஸ்தூ | ஓம்ஸ்க் | சைபீரியா | மேற்கு சைபீரியா | 139,700 | 2,079,220 | ||
56 | ஒரென்பூர்க் ஓப்லஸ்து | ஒரென்பூர்க் | வொல்கா | உரால்ஸ் | 124,000 | 2,179,551 | ||
57 | ஓரியோல் ஓப்லஸ்து | ஓரியோல் | மத்திய | மத்திய | 24,700 | 860,262 | ||
58 | பென்சா ஓப்லஸ்து | பென்சா | வொல்கா | வொல்கா | 43,200 | 1,452,941 | ||
60 | பிசுக்கோவ் ஓப்லஸ்து | பிசுக்கோவ் | வடமேற்கு | வடமேற்கு | 55,300 | 760,810 | ||
61 | ரஸ்தோவ் ஓப்லஸ்து | ரொஸ்தோவ்-நா-தனு | தெற்கு | வடக்கு கவ்க்காஸ் | 100,800 | 4,404,013 | ||
62 | ரியாசான் ஓப்லஸ்து | ரியாசான் | மத்திய | மத்திய | 39,600 | 1,227,910 | ||
63 | சமாரா ஓப்லஸ்து | சமாரா | வொல்கா | வொல்கா | 53,600 | 3,239,737 | ||
64 | சரத்தோவ் ஓப்லஸ்து | சரத்தோவ் | வொல்கா | வொல்கா | 100,200 | 2,668,310 | ||
65 | சக்காலின் ஓப்லஸ்து | கிழக்கு சக்காலின்ஸ்க் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 87,100 | 546,695 | ||
66 | சுவெர்த்லோவ்ஸ்க் ஓப்லஸ்த் | யெக்கதரின்பூர்க் | உரால்ஸ் | உரால்ஸ் | 194,800 | 4,486,214 | ||
67 | சிமலென்ஸ்க் ஓப்லஸ்த் | சிமலென்ஸ்க் | மத்திய | மத்திய | 49,800 | 1,049,574 | ||
68 | தாம்போவ் ஓப்லஸ்த் | தாம்போவ் | மத்திய | மத்திய கரும்பூமி | 34,300 | 1,178,443 | ||
69 | திவெர் ஓப்லஸ்த் | திவெர் | மத்திய | மத்திய | 84,100 | 1,471,459 | ||
70 | தோம்ஸ்க் ஓப்லஸ்து | தோமஸ்க் | சைபீரியா | மேற்கு சைபீரியா | 316,900 | 1,046,039 | ||
71 | தூலா ஓப்லஸ்து | தூலா | மத்திய | மத்திய | 25,700 | 1,675,758 | ||
72 | தியூமென் ஓப்லஸ்து | தியூமென் | உரால்ஸ் | மேற்கு சைபீரியா | 1,435,200 | 3,264,841 | ||
73 | உலியானொவ்ஸ்க் ஓப்லஸ்து | உலியானொவ்ஸ் | வொல்கா | வொல்கா | 37,300 | 1,382,811 | ||
74 | செல்யாபின்ஸ்க் ஓப்லஸ்து | செல்யாபின்ஸ்க் | உரால்ஸ் | உரால்ஸ் | 87,900 | 3,603,339 | ||
76 | யாரொஸ்சிவில் ஓப்லஸ்த் | யாரொசிலாவில் | மத்திய | மத்திய | 36,400 | 1,367,398 | ||
77 | மாஸ்கோ | — | மத்திய | மத்திய | 1,100 | 10,382,754 | ||
78 | சென் பீட்டர்ஸ்பேர்க் | — | வடமேற்கு | வடமேற்கு | 1,439 | 4,662,547 | ||
79 | யூத தன்னாட்சி ஓப்லஸ்து | பிரொபித்சான் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 36,000 | 190,915 | ||
83 | நெனெட்ஸ் தன்னாட்சி ஓக்ருக் | நர்யான்-மார் | வடமேற்கு | வடக்கு | 176,700 | 41,546 | ||
86 | காந்தி-மான்சி த்ன்னாட்சி ஓக்ருக்-யுக்ரா | நிர்வாக மையம்: காந்தி-மான்சிஸ்க் பெரிய நகரம்: சுர்குட் |
உரால்ஸ் | மேற்கு சைபீரியா | 523,100 | 1,432,817 | ||
87 | சுக்கோட்க்கா தன்னாட்சி ஓக்ருக் | அனாதிர் | தூரகிழக்கு | தூரகிழக்கு | 737,700 | 53,824 | ||
89 | யமாலோ-நெனெட்ஸ் தன்னாட்சி ஓக்ருக் | நிர்வாக மையம்: சலெக்கார்ட் பெரிய நகரம்: நோவி உரென்கோய் |
உரால்ஸ் | மேற்கு சைபீரியா | 750,300 | 507,006 |
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.