2012 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி (2012 UEFA European Football Championship) பொதுவாக யூரோ 2012 எனக் குறிப்பிடப்படும் கால்பந்தாட்டப் போட்டி யூஈஎஃப்ஏவால் ஐரோப்பிய தேசிய ஆண்கள் அணிகளிடையே நடத்தப்பட்ட 14வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி ஆகும். போட்டியின் இறுதிக்கட்டச் சுற்றை 2012 சூன் 8 முதல் சூலை 1 வரை போலந்தும் உக்ரைனும் இணைந்து ஏற்று நடத்தின; இரு நாடுகளுக்கும் இந்தப் போட்டியை நடத்தியது இதுவே முதல் முறையாகும். 2007ஆம் ஆண்டில் யூஈஎஃப்ஏயின் செயற்குழுவால் இந்த ஏலமுடிவு எடுக்கப்பட்டது.[1]

விரைவான உண்மைகள் Mistrzostwa Europy w piłce nożnej 2012 (போலியம்) (உக்ரைனிய மொழி), சுற்றுப்போட்டி விவரங்கள் ...
யூஈஎஃப்ஏ யூரோ 2012
Mistrzostwa Europy w piłce nożnej 2012 (போலியம்)
Чемпіонат Європи з футболу 2012 (உக்ரைனிய மொழி)
Thumb
யூஈஎஃப்ஏ யூரோ 2012 அலுவல் சின்னம்
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுகள்போலந்து
உக்ரைன்
நாட்கள்சூன் 8 – சூலை 1
அணிகள்16
அரங்கு(கள்)8 (8 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் எசுப்பானியா (3-ஆம் தடவை)
இரண்டாம் இடம் இத்தாலி
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்31
எடுக்கப்பட்ட கோல்கள்76 (2.45 /ஆட்டம்)
பார்வையாளர்கள்13,77,726 (44,443/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)எசுப்பானியா பெர்னாண்டோ டொரெசு
இத்தாலி மரியோ பலொட்டெலி
உருசியா அலன் த்சகோயெவ்
செருமனி மரியோ கோமெசு
குரோவாசியா மரியோ மண்சூக்கிச்
போர்த்துகல் கிறிஸ்டியானோ ரொனால்டோ
(ஒவ்வொருவரும் 3 இலக்குகள்)
2008
2016
மூடு

இந்தப் போட்டிக்கான தகுதிச் சுற்றுக்கள் 51 நாடுகளுக்கிடையே ஆகத்து 2010 முதல் நவம்பர் 2011 வரை நடைபெற்று வந்தன. ஏற்று நடத்தும் போலந்து, உக்ரைனைத் தவிர 14 நாடுகள் இறுதிச் சுற்றில் விளையாடத் தகுதி பெற்றன. இறுதிச் சுற்றுப் போட்டிகள் 8 அரங்கங்களில் (போலந்தில் 4, உக்ரைனில் 4) நடைபெற்றன. இவற்றில் ஐந்து அரங்கங்கள் இச்சுற்றுப்போட்டிக்காகப் புதிதாக அமைக்கப்பட்டவை ஆகும்.

இறுதிப் போட்டி உக்ரைனின் தலைநகர் கீவில் ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் எசுப்பானியா அணி இத்தாலியை 4–0 என்ற இலக்கில் வென்றது.[2] அடுத்தடுத்து இரண்டு தடவைகள் ஐரோப்பியக் கிண்ணத்தை வென்ற முதலாவது அணியாக எசுப்பானியா சாதனை படைத்தது. அத்துடன் மூன்று பெரும் வெற்றிக் கிண்ணங்களை (ஏனையவை: யூரோ 2008, 2010 உலகக்கோப்பை கால்பந்து)[2]) அடுத்தடுத்து வாங்கிய பெருமையையும் எசுப்பானியா பெற்றது. 2010 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வென்றதன் மூலம் எசுப்பானியா ஏற்கனவே 2013 இல் பிரேசிலில் நடைபெறவிருக்கும் கூட்டமைப்புகள் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளது. அதே வேளையில் யூரோ 2012 இல் இரண்டாவதாக வந்த இத்தாலிய அணியும் கூட்டமைப்புகள் கோப்பைப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.[3]

பங்குபற்றிய நாடுகள்

Thumb
  யூரோ 2012 நடத்துனர்கள் – போலந்து & உக்ரைன்
  தற்போதைய வாகையாளர்
  தகுதி பெற்றோர்
  தகுதி பெறாதோர்
  யூஈஎஃப்ஏ உறுப்பினரல்லாத நாடு

இறுதி கட்ட போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்ற பதினாறு நாடுகள்:

நிகழிடங்கள்

Thumb
விளையாட்டுப் போட்டிகளின் துவக்கத்திற்கான எதிர்நோக்கல் (லிவீவ், உக்ரைன்)
Thumb
ஆடுகள் – போசுனானின் சின்னங்கள் யூரோ 2012 கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருத்தல்

போட்டிகளை நடத்த எட்டு நகரங்களை யூஈஎஃப்ஏ தெரிந்தெடுத்தது. நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்ட அணிகள் இரண்டு விளையாட்டரங்குகளுக்கு ஒரு குழுவாகப் போட்டியிட்டன. நடத்து நகரங்களில் தோனெத்ஸ்க் மற்றும் கார்கீவ் தவிர்த்த மற்ற ஆறு (வார்சா, கதான்ஸ்க்,விராத்ஸ்சாஃப், போசுனான், கீவ், லிவீவ்) நகரங்களும் சுற்றுலா நகரங்கள் ஆகும்.[4]

இந்த எட்டு இடங்களில் ஆறு இடங்களில் புதிய கால்பந்தாட்ட அரங்குகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. போசுனான் மற்றும் கார்கீவில் ஏற்கெனவே உள்ள விளையாட்டரங்கங்கள் மேம்படுத்தப்படுகின்றன.[5][6] மூன்று விளையாட்டரங்கங்கள் யூஈஎஃப்ஏயின் மிக உயர்ந்த தரத்தை எட்டி உள்ளன.

மிகுந்த விளையாட்டு இரசிகர்களின் வரவை எதிர்நோக்கிய யூஈஎஃப்ஏயின் வேண்டுகோளிற்கு இணங்கப் போலந்து மற்றும் உக்ரைனின் போக்குவரத்து அமைப்புகள் முற்றிலுமாகச் சீரமைக்கப்பட்டுள்ளன.[7] (1.4 மில்லியன் நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகி உள்ளன; போட்டி நாட்களில் 20,000 நபர்கள் ஒவ்வொரு நாளும் போலந்து-உக்ரைன் எல்லையைக் கடப்பர் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.[8])

நுழைவுச்சீட்டு

இந்தப் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுக்களை யூஈஎஃப்ஏ தனது வலைத்தளம் மூலமாக நேரடியாக விற்பனை செய்யவும் இறுதி சுற்றுக்களில் விளையாடும் 16 நாடுகளின் கால்பந்து சங்கங்களின் மூலம் வினியோகிக்கவும் திட்டமிட்டது. மார்ச்சு 2011இல் 31 போட்டிகளுக்கான 1.4 மில்லியன் சீட்டுகளுக்கு இணையதளத்தில் விண்ணப்பங்கள் கோரப்பட்டன.[9] 12 மில்லியனுக்கும் கூடுதலாகக் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள் 2008 போட்டிகளை ஒப்பிடும்போது 17% உயர்வாகும்.[10] இவ்வாறு கூடுதலான விண்ணப்பங்கள் வந்தமையால் நுழைவுச்சீட்டுக்கள் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டன.

நுழைவுச் சீட்டின் விலை குழுச் சுற்றுக்களில் கோல் கம்பத்திற்கு பின் இருக்கைகளுக்கான €30 (£25) முதல் இறுதியாட்டத்திற்கு முதன்மை இருக்கைகளுக்கான €600 (£513) வரை வெவ்வேறாக இருந்தது. தனிநபர் சீட்டுக்கள் தவிரவும் இரசிகர்கள் தங்கள் அணியின் அனைத்து விளையாட்டுக்களையும் காணவோ அல்லது ஒரு விளையாட்டரங்கில் நடைபெறும் அனைத்து ஆட்டங்களையும் காணவோ தொகுப்பு சீட்டுக்களும் விற்பனையாயின.[11]

விளையாட்டரங்கங்கள்

யூரோ 2012இல் மொத்தம் 31 ஆட்டங்கள் விளையாடப்பட்டன; இவற்றில் 16 உக்ரைனிலும் 15 போலந்திலும் நடைபெற்றன.

வார்சா கதான்ஸ்க் விராத்ஸ்சாஃப் போசுனான்
தேசிய விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 50,000[12]
பிஜிஈ விளையாட்டுக்களம்
இருக்கைகள்: 40,000[13]
நகராட்சி விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 40,000[14]
நகராட்சி விளையாட்டரங்கம்
இருக்கைகள்: 40,000[15]
குழு Aவில் மூன்று ஆட்டங்கள்
திறப்பு விளையாட்டு, காலிறுதி, அரை-இறுதி
குழு Cயில் மூன்று ஆட்டங்கள்
காலிறுதி
குழு Aவில் மூன்று ஆட்டங்கள் குழு Cயில் மூன்று ஆட்டங்கள்
Thumb Thumb Thumb
கீவ் தோனெத்ஸ்க் கார்கீவ் லிவீவ்
ஒலிம்பிக் தேசிய விளையாட்டு வளாகம்
இருக்கைகள்: 60,000[16]
டோன்பாஸ் விளையாட்டுக்களம்
இருக்கைகள்: 50,000[17]
மெடலிஸ்ட் விளையாட்டு வளாகம்
இருக்கைகள்: 35,000[18]
லிவீவ் விளையாட்டுக்களம்
இருக்கைகள்: 30,000[19]
குழு Dயில் மூன்று ஆட்டங்கள்
காலிறுதிl, இறுதிப் போட்டி
குழு Dயில் மூன்று ஆட்டங்கள்
காலிறுதி, அரை-இறுதி
குழு Bயில் மூன்று ஆட்டங்கள் குழு Bயில் மூன்று ஆட்டங்கள்

Note: இருக்கைகள் எண்ணிக்கை யூஈஎஃப்ஏ யூரோ 2012 ஆட்டங்களுக்கானவை; அரங்கத்தின் முழுமையான கொள்ளளவு கூடுதலாக இருக்கலாம்.

குழுக்கள்

குழுச் சுற்றுக்கள்

மேலதிகத் தகவல்கள் குழு அட்டவணையில் நிறங்கள் ...
குழு அட்டவணையில் நிறங்கள்
காலிறுதிக்கு முன்னேறிய அணிகள்
காலிறுதிக்கு முன்னேறாத அணிகள்
மூடு

குழு A

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
அணி வெ தோ தகோ எகோ கோவே புள்ளிகள்
 செக் குடியரசு 320145−16
 கிரேக்க நாடு 31113304
 உருசியா 311153+24
 போலந்து 302123−12
மூடு
8 சூன் 2012
 போலந்து1 – 1 கிரேக்க நாடு
 உருசியா4 – 1 செக் குடியரசு
12 சூன் 2012
 கிரேக்க நாடு1 – 2 செக் குடியரசு
 போலந்து1 – 1 உருசியா
16 சூன் 2012
 செக் குடியரசு1 – 0 போலந்து
 கிரேக்க நாடு1 – 0 உருசியா

குழு B

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
அணி வெ தோ தகோ எகோ கோவே புள்ளிகள்
 செருமனி 330052+39
 போர்த்துகல் 320154+16
 டென்மார்க் 310245-13
 நெதர்லாந்து 300325−30
மூடு
9 சூன் 2012
நெதர்லாந்து 0 – 1 டென்மார்க்
 செருமனி1 – 0 போர்த்துகல்
13 சூன் 2012
 டென்மார்க்2 – 3 போர்த்துகல்
நெதர்லாந்து 1 – 2 செருமனி
17 சூன் 2012
 போர்த்துகல்2 – 1 நெதர்லாந்து
 டென்மார்க்1 -2 செருமனி

குழு C

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
அணி வெ தோ தகோ எகோ கோவே புள்ளிகள்
 எசுப்பானியா 321061+57
 இத்தாலி 312042+25
 குரோவாசியா 311143+14
 அயர்லாந்து 300319−80
மூடு
10 சூன் 2012
 எசுப்பானியா1 – 1 இத்தாலி
 அயர்லாந்து1 – 3 குரோவாசியா
14 சூன் 2012
 இத்தாலி1 – 1 குரோவாசியா
 எசுப்பானியா4 – 0 அயர்லாந்து
18 சூன் 2012
 குரோவாசியா0 – 1 எசுப்பானியா
 இத்தாலி2 – 0 அயர்லாந்து

குழு D

மேலதிகத் தகவல்கள் அணி, ஆ ...
அணி வெ தோ தகோ எகோ கோவே புள்ளிகள்
 இங்கிலாந்து 321053+27
 பிரான்சு 311133+04
 உக்ரைன் 310224−23
 சுவீடன் 310255−03
மூடு
11 சூன் 2012
 பிரான்சு1 – 1 இங்கிலாந்து
 உக்ரைன்2 – 1 சுவீடன்
15 சூன் 2012
 உக்ரைன்0 – 2 பிரான்சு
 சுவீடன்2 – 3 இங்கிலாந்து
19 சூன் 2012
 இங்கிலாந்து1 – 0 உக்ரைன்
 சுவீடன்2 – 0 பிரான்சு

வெளியேறும் நிலை

காலிறுதி அரையிறுதி இறுதிப்போட்டி
                   
21 சூன் – வார்சா        
  செக் குடியரசு  0
27 சூன் – தோனெத்ஸ்க்
  போர்த்துகல்  1  
  போர்த்துகல்  0 (2)
23 சூன் – தோனெத்ஸ்க்
      எசுப்பானியா (பெ)  0 (4)  
  எசுப்பானியா  2
1 சூலை – கீவ்
  பிரான்சு  0  
  எசுப்பானியா  4
22 சூன் – கதான்ஸ்க்    
    இத்தாலி  0
  செருமனி  4
28 சூன் – வார்சா
  கிரேக்க நாடு  2  
  செருமனி  1
24 சூன் – கீவ்
      இத்தாலி  2  
  இங்கிலாந்து  0 (2)
  இத்தாலி   0 (4)  
 

காலிறுதி-ஆட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் செக் குடியரசு, 0 – 1 ...
மூடு

மேலதிகத் தகவல்கள் செருமனி, 4 – 2 ...
மூடு

மேலதிகத் தகவல்கள் எசுப்பானியா, 2 – 0 ...
மூடு

மேலதிகத் தகவல்கள் இங்கிலாந்து, கூடுதல் நேரம் கழித்து 0 – 0 பெனால்டி 2 -4 ...
 இங்கிலாந்துகூடுதல் நேரம் கழித்து 0 – 0
பெனால்டி 2 -4
 இத்தாலி
மூடு

அரையிறுதி-ஆட்டங்கள்

மேலதிகத் தகவல்கள் போர்த்துகல், கூடுதல் நேரத்திற்கு பிறகு 0 – 0 பெ.உதை 2 -4 ...
 போர்த்துகல்கூடுதல் நேரத்திற்கு பிறகு 0 – 0
பெ.உதை 2 -4
 எசுப்பானியா
மூடு

மேலதிகத் தகவல்கள் செருமனி, 1 – 2 ...
மூடு

இறுதியாட்டம்

மேலதிகத் தகவல்கள் எசுப்பானியா, 4–0 ...
 எசுப்பானியா4–0 இத்தாலி
சில்வா Goal 14'
அல்பா Goal 41'
டொரெசு Goal 84'
மாட்டா Goal 88'
மூலம்
மூடு
பார்வையாளர்கள்: 63,170[20]
நடுவர்: பெத்ரோ புரொயென்கா (போர்த்துகல்)

தொடர்புள்ள ஏற்பாடுகள்

சின்னம், சொலவம் மற்றும் கருத்துப் பாட்டுகள்

Thumb
அலுவல்முறை சின்னம்

போட்டிகளின் சின்னத்துடன் போட்டிக்கான சொலவம், இணைந்து வரலாறு படைப்போம் (போலிய: Razem tworzymy przyszłość, நேரடியாக, "இணைந்து நாம் எதிர்காலத்தைப் படைப்போம் ", உக்ரைனியன்: Творимо історію разом, Tvorymo istoriyu razom), அறிவிக்கப்பட்டது.[21] போர்த்துக்கேய குழு பிராண்டியா சென்ட்ரல் வடிவமைத்த அலுவல்முறை சின்னம் திசம்பர் 14, 2009 அன்று கீவ் நகரின் மைக்கலிவ்ஸ்கா சதுக்கத்தில் வெளியிடப்பட்டது.[22] வைசினான்கி எனப்படும் போலந்து, உக்ரைனின் ஊரகப்பகுதிகளின் கைவினைக் கலையான காகிதம் வெட்டும் முறை சின்னத்திற்கான காண்நிலை அடையாளமாக விளங்கியது.[21][23] நிகழ்ச்சிகளின் அங்கமாக போட்டிகள் நடைபெற்ற எட்டு நகரங்களிலும் குறியீட்டுக் கட்டிடங்கள் இந்த சின்னம் கொண்டு ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன[24].

யூரோ 2012க்கான அலுவல்முறையான கருப்பாடல் "முடிவிலா கோடை" (Endless Summer) என்ற பாட்டை செருமனியின் பாடகர் ஓசியானா பாடியுள்ளார்.[25] மேலும் 2008 போட்டியின்போது யூஈஎஃப்ஏவிற்காக ரோலியோ ஆர்ம்ஸ்ட்ராங் தொகுத்துக் கொடுத்த மெல்லிசையையும் தக்க வைத்துக்கொண்டது.[26] அயர்லாந்து குடியரசும் ஓர் அலுவல்முறையான பாடலை உருவாக்கியுள்ளது: "போலந்திற்கான கல் நிறைந்த சாலை " (The Rocky Road to Poland) [27]. எசுப்பானியாவில் ஒலிபரப்பு நிறுவனமான மீடியாசெட் எசுப்பானா கம்யூனிகேசியோன் டேவிட் பிஸ்பல் நிகழ்த்திய நோ ஹே 2 சின் 3, என்ற பாடலை உருவாக்கியது.[28]

கோப்பை

போட்டிகள் துவங்க ஏழு வாரங்கள் இருக்கும்போதே போட்டிக்கான கோப்பை நடத்தப்படும் நகரங்களுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. போட்டியின் முதல் ஆட்டம் துவங்க நூறு நாட்களுக்கு முன்னர் 35.5 மீட்டர்கள் (116 அடி) உயரத்தில் கோப்பை வடிவத்தில் அமைந்த வெப்பக்காற்று பலூன் சுவிட்சர்லாந்தின் நையானிலிருந்து ஏற்று நடத்தும் நாடுகளின் 14 நகரங்களுக்குப் போட்டிகளை நினைவுறுத்தும் வண்ணம் செலுத்தப்பட்டது.[29] ஏப்ரல் 20, 2012 அன்றிலிருந்து கோப்பை வார்சா, விராத்சாஃப்,, கதான்ஸ்க், போசுனான், கிராகாவ், காதோவிச் மற்றும் லோட்சு நகரங்களுக்குச் சுற்றுலா சென்றது. பின்னதாக உக்ரைனின் கீவ், இவனோ-பிரான்க்விஸ்க், கார்கீவ், தோனெத்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், லிவீவ், ஒடெசா என்ற ஏழு நகரங்களுக்குச் சென்றது.[30][31]

போட்டிக்கான கால்பந்து

யூஈஎஃப்ஏ யூரோ 2012க்கான அலுவல்முறையான கால்பந்தாக அடிடாஸ் நிறுவனம் வடிவமைத்த டாங்கோ 12 தெரிவு செய்யப்பட்டுள்ளது.[32] இதே பந்தின் சற்றே மாற்றியமைக்கப்பட்ட பந்துகள் உடன்நிகழும் ஆபிரிக்கக் கோப்பைப் போட்டிகளிலும் 2012 ஒலிம்பிக் கால்பந்தாட்டப் போட்டிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. முந்தைய 2010 உலகக்கோப்பையில் பயன்படுத்திய ஜாபுலானி வகை பந்துகளை விட இவை காலால் ஆளவும் கட்டுப்படுத்தவும் எளிதாக இருக்குமென மதிப்பிடப்படுகிறது.[33]

வணிகப்பொருட்களும் நற்பேறுச் சின்னங்களும்

Thumb
போலிய உக்ரைனிய இரட்டையர்
இசுலாவெக் & இசுலாவ்கோ

இப்போட்டிகளை பரப்பும் வழிமுறையாக யூஈஎஃப்ஏ வார்னர் பிரதர்சுடன் உலகளாவிய பரப்புரைக்கு உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டனர்.[34] இதன்படி உடைகள், மகிழுந்து அலங்காலப் பொருட்கள், பைகள் போன்ற பல்வேறு வணிகப்பொருட்களை யூரோ 2012 சின்னத்துடன் தயாரித்து விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.[35]

மேலும் யூரோ 2012இன் நற்பேறுச் சின்னங்களாக இசுலாவிக் மற்றும் இசுலாவ்கோ என்ற இரட்டையரை வார்னர் பிரதர்சு வடிவமைத்தது. இந்த இரட்டையர் போலிய உக்ரைனிய கால்பந்து வீரர்களை அவர்களது தேசிய கால்பந்து அணிகளின் சீருடையில் பிரதிநிதிப் படுத்துகின்றனர். திசம்பர் 2010இல் இந்த இரட்டையர் அறிமுகப்படுத்தப்பட்டனர்.[36]

கவலைகளும் சர்ச்சைகளும்

யூரோ 2012 போட்டிகளைப் போலந்து மற்றும் உக்ரைனில் நடத்துவதற்கு யூஈஎஃப்ஏ செயற்குழுவில் வாக்கெடுப்பு மூலம் தெரிந்தெடுக்கப்பட்ட பின்னர் பல்வேறுச் சிக்கல்களால் இந்த இரு நாடுகளும் இப்போட்டிகளை நடத்துமா என்ற கேள்விக்குறி பலமுறை எழுந்தது

துவக்கத்தில் யூஈஎஃப்ஏயின் கவலைகள்

சூன் 2008இல் கீவ் நகர ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தின் சீரமைப்புப் பணிகளை முடிப்பதில் ஏற்பட்ட தாமதங்கள் உக்ரைனால் இணையாக ஏற்று நடத்த அச்சுறுத்தல்களாக இருந்தன.[37] இதனைத் தொடர்ந்த உலகளாவிய பொருளியல் தேக்கநிலையும் நிதியளிப்புச் சிக்கல்களை ஏற்படுத்தின.[38] செப்டம்பர் 2010இல் புதியதாகப் பதவியேற்ற போலந்து அரசு ஊழல் காரணங்களால் போலிய கால்பந்துச் சங்கத்தை இடைநீக்கம் செய்து நிர்வாக அதிகாரி ஒருவரை நியமித்தது. இதைத் தொடர்ந்து யூஈஎஃப்ஏ போலந்தின் ஏற்றுநடத்தும் உரிமையைத் திரும்பப் பெறப்போவதாக எச்சரித்தது.[39] இதனால் தன் நிலையை மாற்றிக்கொள்ளாத அரசு நிலையால் போட்டிகள் வேறொரு நாட்டிற்கு மாற்றப்படுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 2009இல் யூஈஎஃப்ஏ ஒன்றியத் தலைவர் பிளாட்டினி சிக்கல்கள் சரிசெய்யப்பட்டு விட்டதாகக் கூறினார்.

மே 2010இல் ஒரு நேர்முகப் பேட்டியில் பிளாட்டினி செருமனும் அங்கேரியும் விளையாட்டரங்கக் கட்டமைப்புக்களில் பின்தங்கியிருந்த உக்ரைனிற்கு மாற்றாகப் போட்டிகளை ஏற்று நடத்த தயாராக இருப்பதாகக் கூறினார்.[40] இருப்பினும் ஆகத்து 2010இல், உக்ரைனின் கட்டமைப்புகளைப் பார்வையிட்ட பிளாட்டினி உக்ரைனிற்கான இறுதி எச்சரிக்கை நீக்கப்பட்டு விட்டதாகக் கருதலாம் என்றார்.[41] மேலும் எவ்விதச் சிக்கல்களும் இன்றி இரு நாடுகளும் போட்டிகளைச் சிறப்பாக நடத்தும் என்ற நம்பிக்கைத் தெரிவித்தார்.[42] செப்டம்பர் 2011இல் உக்ரைன் சென்ற யூஈஎஃப்ஏ குழுவினர் இதனை உறுதி செய்தனர்.[43]

அரசியல் புறக்கணிப்புகள்

Thumb
ஐரோப்பிய மக்கள் கட்சியின் உச்சி மாநாட்டில் திமொஷென்கோவும் அங்கெலா மேர்க்கெலும் - மார்ச்சு 2011

உருசிய இயற்கைவளி ஒப்பந்தப் புள்ளிகளில் ஊழல் புரிந்ததாக எட்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு உக்ரைனின் முன்னாள் பிரதமர் யூலியா திமொஷென்கோ அக்டோபர் 2011இல் சிறையிலிடப்பட்டார். ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் சிறைத்தண்டனையை எதிர்த்து வந்தது.[44] சிறையில் அவர் நடத்தப்பட்ட விதம் குறித்தும் இந்தக் குற்றச்சாட்டுக்கள் அரசியல் பகை காரணமானவை என்றும் ஏப்ரல் 20, 2012இல் திமொஷென்கோ சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். இதனைக் காரணம் காட்டி உக்ரைனில் நடைபெறும் யூரோ 2012 போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.[45][46][47] மே மாதம் ஆஸ்திரியாவின் அதிபர் வெர்னர் ஃபேமன் ஓர் "அரசியல் செய்தியாக" தமது அரசின் அதிகாரிகள் இப்போட்டிகளில் கலந்து கொள்ள மாட்டார்களென அறிவித்தார்.[48] தொடர்ந்து பெல்ஜியமும் தன் அரசு அதிகாரிகள் இப்போட்டிகளைப் புறக்கணிப்பார்கள் என்றும் திமொஷென்கோவின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அறிவித்தார்.[49] திமொஷென்கோ விடுதலை செய்யப்பட்டால்தான் செருமனியின் அதிபர் அங்கெலா மேர்க்கெல் வருகை தருவாரென செருமனி அறிவித்துள்ளது;[46] தவிரவும் தமது அமைச்சர்களுக்கும் இவ்வாறே முடிவெடுக்க அங்கெலா வற்புறுத்தி உள்ளார்.[50] இருப்பினும், செருமானிய விளையாட்டு அதிகாரிகள் இத்தகைய புறக்கணிப்புகள் செயல்திறனுடைவை அல்லவென்றும் போட்டிகள் சீராக நடந்தேற வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.[51] இத்தகைய புறக்கணிப்பிற்கான கோரிக்கைகளை தொடர்பற்றவையென போலந்தின் பிரதமர் கண்டித்த போதிலும்[52] இதற்குத் தீர்வு காணாவிடில் உக்ரைனின் "பெயர் பெரியளவில் கெடும்" எனவும் எச்சரித்தார்.[53] போலந்தின் எதிர்கட்சிகள் திமொஷென்கோவிற்கு நீதி கிடைக்க உக்ரைனில் நடக்கும் போட்டிகளைப் புறக்கணிக்க அறைகூவல் விடுத்துள்ளன.[54]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.