மைக்கேல் பரடே
From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் பரடே (Michael Faraday, செப்டெம்பர் 22, 1791 – ஆகஸ்டு 25, 1867)), பிரித்தானியாவைச் சேர்ந்த ஒரு வேதியியலாளரும், இயற்பியலாளரும் ஆவார். இவர் மின்காந்தவியல், மின்வேதியியல் ஆகிய துறைகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். இக்காலச் சோதனைச்சாலைகளில் சூடாக்குவதற்கான ஒரு கருவியாக உலகளாவிய முறையில் பயன்படுகின்ற பன்சன் சுடரடுப்பின் ஆரம்ப வடிவத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே.
விரைவான உண்மைகள் மைக்கேல் பரடே, பிறப்பு ...
மைக்கேல் பரடே | |
---|---|
பிறப்பு | (1791-09-22)22 செப்டம்பர் 1791 நியுயிங்டன் பட்ஸ், வர்செஸ்டர், இங்கிலாந்து |
இறப்பு | 25 ஆகத்து 1867(1867-08-25) (அகவை 75) ஹாம்ப்டன் கோர்ட், மிடில்செக்ஸ், இங்கிலாந்து |
வாழிடம் | இங்கிலாந்து |
தேசியம் | பிரிட்டானியர் |
துறை | இயற்பியல் மற்றும் வேதியியல் |
பணியிடங்கள் | இராயல் கல்லூரி |
அறியப்படுவது | பாரடேவின் தூண்டல் விதி மின்னிரசாயனவியல் பாரடே விளைவு பாரடே கூண்டு பாரடே மாறிலி பாரடே கோப்பை மின்னாற்பகுப்பின் பாரடே விதிகள் பாரடே முரண்பாடு பாரடே-திறன் விளைவு பாரடே அலை விசைக்கோடுகள் |
தாக்கம் செலுத்தியோர் | ஹம்ப்ரி டேவி வில்லியம் தாமஸ் பிராண்டே |
விருதுகள் | இராயல் பதக்கம் (1835 & 1846) காப்லே பதக்கம் (1832 & 1838) இரம்ஃபோடு பதக்கம் (1846) |
கையொப்பம் |
மூடு
மைக்கேல் பரடே, உலக வரலாற்றில் மிகச் சிறந்த அறிவியலாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகின்றார். சில அறிவியல் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியன் வரலாற்றின் மிகச் சிறந்த சோதனையாளராக இவரைக் குறிப்பிடுகின்றனர். இவருடைய முயற்சிகளின் காரணமாகவே மின்சாரம் பொதுவான பயன்பாட்டுக்கு உகந்த ஒன்றாக உருவானது எனலாம்.