ஜனநாயக மக்கள் முன்னணி (Democratic People's Front, முன்னர் மேலக மக்கள் முன்னணி (Western People's Front), என்பது இலங்கையின் ஓர் அரசியல் கட்சி. இது முக்கியமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகிறது.[1]

விரைவான உண்மைகள் ஜனநாயக மக்கள் முன்னணி, தலைவர் ...
ஜனநாயக மக்கள் முன்னணி
Democratic People's Front
தலைவர்மனோ கணேசன்
முன்னர்மேலக மக்கள் முன்னணி
தலைமையகம்72 பாங்க்சால் வீதி, கொழும்பு 11
தேசியக் கூட்டணிதமிழ் முற்போக்கு கூட்டணி
தேர்தல் சின்னம்
ஏணி
இலங்கை அரசியல்
மூடு

மேலக மக்கள் முன்னணி ஆரம்பத்தில் ஒரு தொழிற்சங்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது, பின்னர் அரசியல்கட்சியாக மாற்றப்பட்டது. இக்கட்சி கொழும்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் மக்கள் இடையே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது. இக்கட்சியின் தலைவர் மனோ கணேசன்.

2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள்

2011 இல் 322 உள்ளூராட்சி சபைகளுக்கு இடம்பெற்ற தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி 270 சபைகளைக் கைப்பற்றியது. மனோ கணேசன் தலைமையில் ஜனநாயக மக்கள் முன்னணி எந்த ஒரு சபையையும் கைப்பற்றவில்லை. ஆனாலும் 4 சபைகளில் போட்டியிட்டு 10 உறுப்பினர்களைப் பெற்றது. ஜனநாயக மக்கள் முன்னணியின் கூட்டணியில் விக்கிரமபாகு கருணாரத்தினவின் இடது முன்னணியும் போட்டியிட்டிருந்தது. கொழும்பு மாநகரச்பைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வழங்கியிருந்தது.

ஜமமு வென்ற உறுப்பினர்கள்

மேலதிகத் தகவல்கள் உள்ளூராட்சிசபை, வாக்குகள் ...
உள்ளூராட்சி
சபை
வாக்குகள்%ஜமமு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
ஜமமு
உறுப்பினர்களின் பெயர்களும்
பெற்ற வாக்குகளும்
கொழும்பு மாநகரசபை26,22911.07%6மனோ கணேசன் (28,433)
எஸ். குகவரதன் (4,223),
கே. ரி. குருசாமி (3,978),
கங்கைவேணியன் (3,389),
சி. பாஸ்கரா (3,156),
லோரன்ஸ் பெர்னாண்டோ (1,531)
அம்பகமுவ பிரதேச சபை4,8556.93%2விபரம் இல்லை
தெகிவளை - கல்கிசை மாநகர சபை2,1672.86%1விக்கிரமபாகு கருணாரத்தின (2,171)
கொலன்னாவ நகர சபை9383.9%1அரவிந்தன் முத்துவீரன் ராஜகுமாரன் (904)
மொத்தம்34,189-10-
மூலம்:"உள்ளூராட்சித் தேர்தல்கள், 2011". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2011-10-06. பார்க்கப்பட்ட நாள் 2011-10-18.
மூடு

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.