மூலனூர்
இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். From Wikipedia, the free encyclopedia
மூலனூர் (ஆங்கிலம்:Mulanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்திலுள்ள, தாராபுரம் வட்டத்தில் உள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தின் தலமையிடமும், தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.
மூலனூர் | |
அமைவிடம் | 10°46′N 77°43′E |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | தாராபுரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
15,223 (2011[update]) • 314/km2 (813/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
48.5 சதுர கிலோமீட்டர்கள் (18.7 sq mi) • 238 மீட்டர்கள் (781 அடி) |
இணையதளம் | www.townpanchayat.in/mulanur |
இப்பேரூராட்சி பகுதியில் விவசாயமே முக்கிய தொழிலாகும். மழைப் பொழிவை ஆதாராமாகக் கொண்டு இப்பகுதியில் விவசாய பணிகளும், கால்நடைகள் வளர்ப்பும் மேற்கொள்ளப்படுகிறது. முருங்கைக்காய், மிளகாய் மற்றும் கண்வலி கிழங்கு என்ற மருத்துவ தன்மையுள்ள கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதி முழுமைக்கும் காவிரி ஆற்றின் நீரை கொடுமுடி என்ற இடத்திலிருந்து கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இப்பேரூராட்சியிலிருந்து திருப்பூர் 67 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே மேற்கில் தாராபுரம் 20 கிமீ; வடக்கில் வெள்ளக்கோயில் 20 கிமீ தொலைவில் உள்ளது.
இது 48.5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 105 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி தாராபுரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,617 வீடுகளும், 15,223 மக்கள்தொகையும் கொண்டது.[4]
இவ்வூரின் அமைவிடம் 10.77°N 77.72°E ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 238 மீட்டர் (780 அடி) உயரத்தில் இருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.