![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Leishmania_donovani_01.png/640px-Leishmania_donovani_01.png&w=640&q=50)
மூத்தவிலங்கு
கரிமப் பொருட்களுக்கு உணவளிக்கும் ஒற்றை செல் யூகாரியோடிக் உயிரினங்கள் / From Wikipedia, the free encyclopedia
மூத்தவிலங்கு அல்லது முதலுயிரி (Protozoa) எனப்படுவது ஆங்கிலத்தில் புரோட்டோசோவா என அறியப்படுகிறது. இந்த சொல்லானது கிரேக்க மொழியில் இருந்து வந்ததாகும் (புரோடான் - "முதல்" ; சோஆ - "உயிர்கள்" அல்லது "விலங்குகள்"). இது நகரக்கூடிய நுண் மெய்க்கருவுயிரிகளாகும். இவை ஒட்டுண்ணிகளாவும், தனித்தும் வாழக்கூடியவை. இவை மைக்ராஸ்கோப் எனும் உருப்பெருக்காடி மூலம் மட்டுமே காணக்கூடிய மிக நுண்ணிய உயிரினமாகும். இது ஒரு ஒருசெல் உயிராகும். குளம் அல்லது குட்டையிலிருந்து எடுக்கப்படும் ஒரு கரண்டி நீரில் பல இலட்சக்கணக்கான முதலுயிரிகள் உள்ளன.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b4/Leishmania_donovani_01.png/640px-Leishmania_donovani_01.png)