மஸ்ஜிதுல் ஹராம்
From Wikipedia, the free encyclopedia
புனித காபா அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம் (Al-Masjid al-Ḥharām (المسجد الحرام IPA: [ʔælˈmæsʤɪd ælħɑˈrɑːm] பொருள்: "புனித இறைஇல்லம்") பள்ளிவாசல் சவூதி அரேபியாவில் உள்ள மக்கா மாநகரில் அமைந்துள்ள உலகிலேயே பெரிய பள்ளிவாசல் ஆகும். இது காஃபத்துல்லா எனவும் அழைக்கப்படும். உலக இசுலாமியர்களின் முதன்மையான இறை வணக்கத்தலம் ஆகும். உலக இசுலாமியர்கள் அனைவரும் இந்த பள்ளிவாசலை நோக்கியே, இறைவனுக்காக தொழுவது என்பது மரபு. உலகில் முதன் முதலாக இசுலாமியர்களால் இறைவனுக்காக கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த பள்ளிவாசல் காபாஷரிப் எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் தற்போதய கட்டமைப்பு உட்புற வெளிப்புற தொழுகை இடங்களையும் உள்ளடக்கி 3,56,800 சதுர மீட்டர்களாகும் (88.2 ஏக்கர்). இதில் 4 மில்லியன் இசுலாமிய ஹஜ் பயணிகள் தங்குவதற்கு இடம் உண்டு. ஹஜ் என்பது உலக அளவில் பக்தர்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
புனித காபா அல்-மஸ்ஜிது அல்-ஹரம். | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மக்கா, சவூதி அரேபியா |
புவியியல் ஆள்கூறுகள் | 21°25′19.2″N 39°49′33.6″E |
சமயம் | இசுலாம் |
மண்டலம் | Hejaz |
மாகாணம் | மக்கா |
நிலை | பள்ளிவாசல் |
தலைமை | Sheikh Dr.Abdul Rahman Al-Sudais & numerous imams (see below) |