தடித்த அலகு மீன்கொத்தி
பறவை இனம் / From Wikipedia, the free encyclopedia
மலை மீன்கொத்தி (stork-billed kingfisher, பெலர்கோப்சிசு கேப்பென்சிசு) என்பது ஒரு மர மீன்கொத்தியாகும். இது பரவலாக இந்தியத் துணைக்கண்டம், தென்கிழக்காசியா ஆகிய வெப்ப வலயங்களில், இந்தியா முதல் இந்தோனேசியா வரை காணப்படுகின்றன. இந்த மீன்கொத்தி இதன் பரவல் பகுதிகளில் வாழ்கின்றன.
விரைவான உண்மைகள் தடித்த அலகு மீன்கொத்தி, காப்பு நிலை ...
தடித்த அலகு மீன்கொத்தி | |
---|---|
தனித்துவமான அலகு அமைப்பு இவ்வினத்திற்கு உரிய சிறப்பாகும். | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | பெ. கேப்பென்சிசு |
இருசொற் பெயரீடு | |
பெலர்கோப்சிசு கேப்பென்சிசு (லின்னேயஸ், 1766) | |
வேறு பெயர்கள் | |
கெல்சியான் கேப்பென்சிசு |
மூடு
இது பெரிய மீன்கொத்தியும், 35 முதல் 38 cm (14 முதல் 15 அங்) நீளம் உடையதும் ஆகும்.[2] இதன் அலகு நாரையின் அலகுபோல பருத்து நீண்டு இரத்தச் சிவப்பாகச் சுமார் 10 செ.மீ. நீளம் இருக்கும். இதன் இந்த தடித்த அலகைக் கொண்டு பிற மீன் கொத்திகளில் இருந்து இதை எளிதில் பிரித்தறியலாம்.
இதன் பிற தமிழ்ப்பெயர்களாக பெரிய அலகு மீன்கொத்தி அல்லது பருத்த அலகு மீன்கொத்தி, குக்குறுப்பான், மலைக்கலவாய், குலுகுலுப்பான், காக்கா பொன்மான் ஆகிய பெயர்கள் உள்ளன.[3]