மலாக்கா மாநகராட்சி
மலாக்கா மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி / From Wikipedia, the free encyclopedia
மலாக்கா மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Melaka Bersejarah; ஆங்கிலம்: Malacca City Council); (சுருக்கம்: MBMB) என்பது மலேசியா, மலாக்கா, மாநிலத்தில் மலாக்கா மாநகரத்தையும் மத்திய மலாக்கா மாவட்டத்தையும் (Melaka Tengah District) நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். மலேசியாவின் மலாக்கா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த மாநகராட்சி செயல்படுகிறது.
விரைவான உண்மைகள் மலாக்கா மாநகராட்சிHistorical Malacca City CouncilMajlis Bandaraya Melaka, வகை ...
மலாக்கா மாநகராட்சி Historical Malacca City Council Majlis Bandaraya Melaka | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 15 ஏப்ரல் 1989 |
முன்பு | மலாக்கா வரலாற்று நகர ஊராட்சி மன்றம் Historical City of Malacca Municipal Council |
தலைமை | |
மாநகர முதல்வர் | சைனல் அபு Zainal bin Abu 1 ஏப்ரல் 2020 |
மாநகரச் செயலாளர் | சுலைமான் அத்தான் Sulaiman bin Atan 1 ஏப்ரல் 2020 |
கூடும் இடம் | |
மலாக்கா மாநகராட்சி தலைமையகம் Bangunan MBMB Jalan Graha Makmur, ஆயர் குரோ, மலாக்கா | |
வலைத்தளம் | |
www |
மூடு
மலாக்கா மாநகராட்சியின் பிரதான தலைமையகம் ஆயர் குரோவில் உள்ள கிரகா மக்மூர் (Graha Makmur) வளாகத்தில்; ஆங் துவா ஜெயா நகராட்சி (Hang Tuah Jaya Municipal Council) கட்டடத்திற்கு எதிரில் அமைந்துள்ளது.