![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/dc/Manjung_highlighted_in_Perak%252C_Malaysia.svg/langta-640px-Manjung_highlighted_in_Perak%252C_Malaysia.svg.png&w=640&q=50)
மஞ்சோங் மாவட்டம்
மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
மஞ்சோங் மாவட்டம் (Manjung District) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். மலேசியாவில் மிகவும் புகழ்பெற்ற பங்கோர் தீவு, அரச மலேசியக் கப்பற் படை தளம் (Royal Malaysian Navy) போன்றவை இங்குதான் இருக்கின்றன.[2]
விரைவான உண்மைகள் மஞ்சோங் மாவட்டம்Daerah Manjung பேராக், நாடு ...
![]() மஞ்சோங் மாவட்டம் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°20′N 100°40′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
அமைவு | 1874 |
தொகுதி | ஸ்ரீ மஞ்சோங் |
பெரிய நகரம் | சித்தியவான் |
பரப்பளவு | |
• மொத்தம் | 1,113.58 km2 (451 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 2,24,331 |
• மதிப்பீடு (2015) | 2,49,600 |
• அடர்த்தி | 200/km2 (500/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 32040 |
தொலைபேசி எண் | +6-05 |
இணையதளம் | மஞ்சோங் இணையத் தளம் |
மூடு
அண்மைய காலங்களில் இந்த மாவட்டத்தில் மக்கள் பெருக்கம் மிகுதியாக ஏற்பட்டுள்ளது. அதனால், நிறைய குடியிருப்புப் பகுதிகளும் வீட்டுமனைப் பகுதிகளும் உருவாக்கம் கண்டு வருகின்றன. மலாயா சுதந்திரம் அடைவதற்கு முன்னர், இந்த மாவட்டம் டிண்டிங்ஸ் என்று அழைக்கப்பட்ட போது, பிரித்தானியர்களின் தொடுவாய்க் குடியேற்றப் பகுதிகளில் ஒரு பகுதியாக இருந்தது.