போலந்துபந்து
பயனர் உருவாக்கிய ஓர் இணையத் தொடர்வினை / From Wikipedia, the free encyclopedia
போலந்துபந்து (Polandball அல்லது நாட்டுப்பந்து) என்பது பயனர் உருவாக்கிய ஓர் இணையத் தொடர்வினை ஆகும். இது 2009ஆம் ஆண்டின் பின்பகுதியில் செருமன் படிமச்சட்டம் கிரௌட்சன்.நெட்டில் துவங்கியது. இந்தத் தொடர்வினை பல இணைய வரைகதைகளில் நாடுகளை பிழையான ஆங்கிலத்தில் பேசும் உருண்டையான நபராக உருவகித்து நாடுகளின் தேசியத் தன்மைகளையும் பன்னாட்டு உறவுகளையும் நக்கல் செய்வதாகும். இத்தகைய வரைகதை நடை போலந்துபந்து (போலந்து நாடு குறித்து இல்லாவிடினும் கூட) என்றும் நாட்டுப்பந்து (பன்மையில் நாட்டுப்பந்துகள்) என்றும் கூறப்படுகின்றன.