பொறளை (Borella) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 08 ஆகும்.

விரைவான உண்மைகள் பொறளை බොරැල්ල Borella, நாடு ...
மூடு

மக்களியல்

பொறளை பலதரப்பட்ட இனத்தவரும் மதத்தவரும் வாழுமிடமாக உள்ளது. இங்குள்ள முதன்மை இனத்தவராக சிங்களவரும் தமிழரும் உள்ளனர். சிறுபான்மையராக பரங்கியர்கள், இலங்கைச் சோனகர் மற்றும் பிறர் உள்ளனர்.

விளையாட்டுத் திடல்கள்

  • பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் - பி.சாரா ஓவல் என்றும் தமிழ் யூனியன் துடுப்பாட்ட மற்றும் தடகள கழகம் என்றும் பரவலாக அறியப்படுகிறது.
  • ரோயல் கொழும்பு குழிப்பந்தாட்டக் கழகம் (ரிட்ஜ்வே லிங்க்ஸ் எனவும் அறியப்படுகிறது). 1879இல் நிறுவப்பட்ட இதுவே நாட்டின் மிகத்தொன்மையான குழிப்பந்தாட்ட மைதானமாகும்.
  • அப்துல் ரகுமான் விளையாட்டுக் கழகம்

பள்ளிகள்

  • உவெசுலி கல்லூரி
  • பண்டாரநாயக்க வித்தியாலயம்
  • கேரி கல்லூரி
  • தேவி பாலிகா வித்தியாலயம்
  • சி. டபுள்யூ. டபுள்யூ. கன்னங்கரா வித்தியாலயம்
  • சுசாமியா வர்தனா மகா வித்தியாலயம்
  • இரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயம்
  • டி. எஸ். சேனநாயக்கா கல்லூரி

இடுகாடு

இங்குள்ள பொறளை கனத்தை இடுகாடு அனைத்து சமயத்தினருக்குமான கொழும்பின் முதன்மை இடுகாடாகும். இது 1840 இல் நிறுவப்பட்டது. இரண்டு உலகப் போர்களிலும் வீரமரணம் அடைந்தவர்களுக்கு தனியான இடம் உள்ளது. இங்கு எரியூட்டுவதற்கும் வசதிகள் உள்ளன.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.