![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/0/0c/Pongal.jpg/640px-Pongal.jpg&w=640&q=50)
தைப்பொங்கல்
தமிழர் வருடாந்திர அறுவடைப் பண்டிகை / From Wikipedia, the free encyclopedia
பொங்கல் (Pongal) என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும்.[1] இந்த விழா தென்னிந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை இந்து கடவுளான சூரிய தேவனுக்கும் இயற்கைக்கும் அர்ப்பணிக்கப்பட்டது.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2b/Preparation_of_Pongal.jpg/640px-Preparation_of_Pongal.jpg)
விரைவான உண்மைகள் தைப்பொங்கல், கடைபிடிப்போர் ...
தைப்பொங்கல் | |
---|---|
![]() தைப்பொங்கல் | |
கடைபிடிப்போர் | தமிழர் |
முக்கியத்துவம் | தமிழர் திருநாள் தமிழ் பண்டிகை |
கொண்டாட்டங்கள் | சூரியனுக்குப் படைத்தல் |
நாள் | தமிழ் நாட்காட்டி: தை 1 |
மூடு