From Wikipedia, the free encyclopedia
பூகிஸ் அல்லது பூகிஸ் மக்கள் (Bugis) என்பவர்கள் (ஆங்கிலம்: Bugis People; மலாய்: Orang Bugis) என்பவர்கள் ஆஸ்திரோனீசிய மொழிகள் (Austronesian Languages) பேசும் இனத்தவரைச் சார்ந்தவர்கள்.
To Ugi ᨈᨚ ᨕᨘᨁᨗ اورڠ بوݢيس | |||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இளம் பூகிஸ் பெண்கள் | |||||||||||||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | |||||||||||||||||||||||||||
7 மில்லியன் (2010) | |||||||||||||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |||||||||||||||||||||||||||
இந்தோனேசியா | 6,359,700[1] | ||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||
மலேசியா | 728,465[2] | ||||||||||||||||||||||||||
சிங்கப்பூர் | 15,000[2][3] | ||||||||||||||||||||||||||
மொழி(கள்) | |||||||||||||||||||||||||||
பூகிஸ் மொழி • இந்தோனேசிய மொழி • மக்காசார் மலாய் மொழி தென் சுலாவெசி மொழிகள் • மலாய் மொழி | |||||||||||||||||||||||||||
சமயங்கள் | |||||||||||||||||||||||||||
இசுலாம்: 98.99% கிறிஸ்தவம் | |||||||||||||||||||||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |||||||||||||||||||||||||||
|
இவர்கள் இந்தோனேசியாவின் சுலாவாசித் தீவில் காணப் படுகினறார்கள். இவர்களின் மூதாதையர்கள் கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னால் தென் சீனாவில் இருந்து குடியேறியவர்கள்.[4] 1605ஆம் ஆண்டில் ஆன்மவாதத்தில் இருந்து இஸ்லாமியத்திற்கு மதம் மாறினார்கள்.[5]
பூகிஸ் மக்கள் சுலாவெசியின் மக்காசார், பாரேபாரே துறைமுகப் பட்டணங்களில் மிகுதியாக வாழ்ந்தாலும், பெரும்பலோர் உள்நிலப் பகுதிகளில் நெல் விவசாயம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
மலேசியாவின் ஜொகூர் சுல்தானகத்தில் பூகிஸ்காரர்களின் தாக்கம் அதிகமாக உள்ளது.[6] இவர்களில் சிலர் வட ஆஸ்திரேலியாவிலும் வாழ்கின்றனர்.
சுலாவெசியில் வாழும் பூகிஸ்காரர்கள் பெரும்பாலும் நெல் விவசாயம், சிறு வர்த்தகங்கள், மீனவத்தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். விவசாயம் செய்வதில் பூகிஸ்காரப் பெண்கள் திறமைசாலிகளாக விளங்குகின்றனர். இவர்கள் பட்டுத் துணிகள் நெய்வதிலும் கெட்டிக்காரர்கள்.
இவர்களின் பெரும்பாலான திருமணங்கள் பெற்றோர் பார்த்து நடத்துபவையாக உள்ளன. திருமணத்திற்குப் பின் மாப்பிள்ளை, பெண் வீட்டாருடன் சில ஆண்டுகளுக்கு தங்கி வாழ வேண்டும். பூகிஸ்காரர்களிடையே விவாகரத்து என்பது மிகப் பரவலாக இருக்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.