பிரான்ஸ் காஃப்கா
From Wikipedia, the free encyclopedia
பிரான்ஸ் காஃப்கா (Franz Kafka, 3 ஜூலை 1883 – 3 ஜூன் 1924) இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான புனைகதை எழுத்தாளர்களுள் ஒருவர். இவர் அக்காலத்து ஆஸ்திரியா-ஹங்கேரியில் இருந்ததும் இப்போது செக் குடியரசில் உள்ளதுமான பிராக் நகரில், நடுத்தர வகுப்பைச் சேர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். இவரது தனித்துவமான ஆக்கங்களுட் பல முற்றுப்பெறாதவை என்பதுடன், பெரும்பாலானவை அவரது இறப்புக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது ஆக்கங்கள் மேல்நாட்டு இலக்கியத்தில் மிகக் கூடிய செல்வாக்குச் செலுத்தியவற்றுள் அடங்குவனவாகும்.
விரைவான உண்மைகள் பிரான்ஸ் காஃப்கா, பிறப்பு ...
பிரான்ஸ் காஃப்கா | |
---|---|
1906ல் எடுக்கப்பட்ட பிராண்ஸ் காஃப்காவின் ஒளிப்படம். | |
பிறப்பு | பிரான்ஸ் காஃப்கா (1883-07-03)3 சூலை 1883 பிராக், ஆஸ்திரியா-ஹங்கேரி |
இறப்பு | 3 சூன் 1924(1924-06-03) (அகவை 40) வியன்னா, ஆஸ்திரியாவுக்கு அண்மையில் உள்ள கீர்லிங் |
தொழில் | காப்புறுதி அலுவலர், தொழிற்சாலை மேலாளர், புதின எழுத்தாளர், சிறுகதை எழுத்தாளர். |
தேசியம் | யூதர்-பொஹேமியர் (ஆஸ்திரியா-ஹங்கேரி) |
வகை | புதினம், சிறுகதை |
இலக்கிய இயக்கம் | நவீனத்துவம், இருப்பியலியம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | த டிரயல், த காசில் |
கையொப்பம் | |
மூடு
உருமாற்றம் (The Metamorphosis - 1915) போன்ற இவரது கதைகளும், வழக்கு (The Trial - 1925), கோட்டை (The Castle - 1926) போன்ற புதினங்களும் பயங்கரமான அதிகாரம் சார்ந்த உலகில் கவலைகளுக்கு உள்ளாகும் தனிமனிதர்களைப் பற்றியவையாகும்.