பெர்க்லி மென்பொருள் பரவல் (Berkeley Software Distribution, சுருக்கி BSD, பிஎசுடி , சிலநேரங்களில் பெர்க்லி யுனிக்சு ) எனப்படுவது 1977 முதல் 1995 வரை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்தில் உள்ள கணினி அமைப்புகள் ஆய்வுக் குழுவால் (CSRG) உருவாக்கி வினியோகிக்கப்பட்ட யுனிக்சு இயக்கு தள கிளைத்தலாகும். இன்று பிஎசுடியின் வழித்தோன்றல்கள் அனைத்துமே பொதுவாக பிஎசுடி என்றே அழைக்கப்பட்டு யுனிக்சு ஒத்த குடும்பவகையாக குறிப்பிடப்படுகின்றன. முதல் பிஎசுடி மூலநிரலிலிருந்து பெறப்பட்ட இயக்கு தளங்கள் இன்றும் முனைப்பாக உருவாக்கப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

விரைவான உண்மைகள் விருத்தியாளர், Programmed in ...
பிஎசுடி யுனிக்சு
விருத்தியாளர் கணினி அமைப்புகள் ஆய்வுக் குழு (CSRG), கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி
Programmed in சி
இயங்குதளக்
குடும்பம்
யுனிக்சு
மூலநிரல் வடிவம் வரலாற்றின்படி மூடப்பட்ட மூலநிரல், 1991 முதல் படிப்படியாக திறந்த மூலநிரலுக்கு மாற்றம்.
முதல் வெளியீடு 1977
பிந்தைய நிலையான பதிப்பு 4.4-லைட்2 / 1995
கிடைக்கும் மொழிகள் ஆங்கிலம்
நிலைநிறுத்தப்பட்ட
இயங்குதளம்
பிடிபி-11, வாக்சு, இன்டெல் 80386
கருனி வகை ஒருசீர் கரு
இயல்பிருப்பு இடைமுகம் கட்டளைவரி பயனர் இடைமுகம்
அனுமதி பிஎசுடி உரிமங்கள்
தற்போதைய நிலை கிளைத்தவைகளால் மேவப்பட்டது (கீழே பார்க்க)
மூடு

பிஎசுடி தனது துவக்கநிலை நிரல் அடித்தளத்தையும் வடிவமைப்பையும் முதல் ஏடி&டி யுனிக்சுடன் பகிர்ந்திருந்தமையால் இதனை ஓர் யுனிக்சு கிளையாக- பிஎசுடி யுனிக்சு- கருதினர். 1980களில் இந்தப் பரவலை டிஜிட்டல் எக்யுப்மென்ட் கார்பொரேசன் (DEC), சன் மைக்ரோசிஸ்டம்ஸ் போன்ற பணிக்கணினி நிறுவனங்கள் சில மாற்றங்களுடன் தங்களுக்கு உரிமையான யுனிக்சு இயக்குதளமாக உருவாக்கிக் கொண்டனர். இதன் எளிமையான உரிமை வழங்கலும் முன்னறிவும் இந்த நிறுவனங்களின் அக்கால மென்பொறியியலாளர்களுக்கு வசதியாக இருந்தது.

இந்த உரிமையுள்ள பிஎசுடியிலிருந்து கிளைத்தவைகள் 1990களில் யுனிக்சு (அமைப்பு V வெளியீடு 4) மற்றும் OSF/1 இயக்கு தளங்களால் மேவப்பட்டாலும் (இரண்டுமே பிஎசுடி நிரலை அடித்தளமாகக் கொண்டிருந்தன; தவிர பிற தற்கால யுனிக்சு தளங்களின் அடிப்படையாக அமைந்தன) பின்னாள் பிஎசுடி வெளியீடுகள் இன்றும் வளர்க்கப்படும் பிரீபிஎசுடி, நெட்பிஎசுடி, ஓப்பன்பிஎசுடி அல்லது டிராகன்ஃப்ளை போன்ற பல திறந்த மூலநிரல் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இவை, பகுதியாகவோ முழுமையாகவோ தற்கால உரிமைபெற்ற இயக்குதளங்களில், மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயக்குதள டிசிபி/ஐபி பிணைய நிரல் அல்லது ஆப்பிள் நிறுவனத்தின் மாக் ஓஎசு X , பயன்படுத்தப்பட்டுள்ளன.

துணைநூற் பட்டியல்

வெளியிணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.