From Wikipedia, the free encyclopedia
பார்செலோனா (அல்லது பார்சிலோனா) (Barcelona; /ˌbɑːrsəˈloʊnə/; எசுப்பானியம்: [baɾθeˈlona]) எசுப்பானியா நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். காட்டலோனியா பகுதியின் தலைநகரம் ஆகும். இந்நகரின் மக்கள் தொகை 2018 கணக்கெடுப்பின் படி 16,20,343 ஆகும்; இது பார்சிலோனா நிர்வாகப் பகுதிக்குள் வாழும் மக்கள்தொகையாகும், அதாவது 101.4 கிமீ² பரப்பில் வாழ்வோரின் மக்கள்தொகை. புறநகர்ப் பகுதியில், இது 803 கிமீ² வரை விரிகிறது, தோராயமாக 4.5லிருந்து 5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். பாரீசு, இலண்டன், ரூர், மிலான் ஆகிய நகர்களுக்கடுத்து ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிக புறநகர் மக்கட்தொகை கொண்ட (ஆறாவது இடத்தில்) நகராகத் திகழ்கிறது. மெடிட்டரேனியன் கடற்கரையில் இருக்கும் பெருநகர்களிலேயே இதுவே மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் யோப்ரிகாட் மற்றும் பீசோசு நதிகளின் முகவாய்ப்பகுதிகளின் இடையே அமைந்துள்ளது. இதன் மேற்கு எல்லையாக செல்லா டி கோல்செரோலா மலைமுகடு (512 மீ/1680 அடி) அமைந்துள்ளது.
பார்செலோனா
| |
---|---|
பார்செலோனா அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 41°23′N 2°11′E | |
நாடு | எசுப்பானியா |
தனியாட்சிப் பகுதி | காத்தலோனியா |
மாகாணம் | பார்செலோனா |
கொமார்க்கா | பார்செலோனெஸ் |
தோற்றம் | கி.மு. 3ம் நூற்றாண்டு |
அரசு | |
• மாநகரத் தலைவர் | அடா கொலாவ் பல்லானோ |
பரப்பளவு | |
• மாநகரம் | 101.4 km2 (39.2 sq mi) |
ஏற்றம் | 12 m (39 ft) |
மக்கள்தொகை (2018) | |
• மாநகரம் | 16,20,343 |
• அடர்த்தி | 16,000/km2 (41,000/sq mi) |
• நகர்ப்புறம் | 48,40,000[2] |
• பெருநகர் | 54,74,482[3] |
நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (ம.ஐ.கோ.நே.) |
இடக் குறியீடு | +34—93 |
இணையதளம் | www |
ரோமானியப் பேரரசின் நகரமாகத் தோற்றுவிக்கப்பட்ட பார்செலோனா, விரைவில் பார்செலோனா மாவட்டத்தின் தலைநகராக மாறியது. அரகான் அரசாட்சியின் ஆளுகைக்குட்பட்ட பின்னர், அரகான் பேரரசின் மிக முக்கியமான நகரமாக பார்செலோனா உருப்பெற்றது. வரலாற்றில் பலமுறை முற்றுகையிடப்பட்டு சிதைக்கப்பட்ட இந்நகரம், தற்போது செழுமையான பாரம்பரிய சின்னமாகத் திகழ்கிறது. இக்காலத்தில், மிக முக்கியமான கலாச்சார நடுவமாகவும் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள் வருகைதரும் இடமாகவும் இந்நகரம் இருக்கிறது. 1992இல் இந்நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்பட்டன. மேலும் பல முக்கியமான உலகத்தரத்திலான மாநாடுகளும் கலந்தாய்வுகளும், முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.
பார்சிலோனா உலகின் முன்னணி பொருளாதார ,சுற்றுலா, மற்றும் வர்த்தக நகரமாக திகழ்கிறது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பொருளாதார சக்தியாகவும் உலகில் 35 வது இடத்தயும் வகிக்கின்றது.இதன் மொத்த உற்பத்தி €177 பில்லியன் யூரோ ஆகும். இது வருடத்திற்கு 17% வளர்ச்சிடயுடன் ஐரோப்பாவின் நான்காவது வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளது.
பார்சிலோனா ஐரோப்பாவின் முக்கிய போக்குவரத்து துறைமுகங்களில் ஒன்றாக உள்ளது.இது ஐரோப்பியாவில் 9 ஆவது இடத்தில் உள்ளது.இது 7.86 சதுர கி.மீ பரப்பளவுடன் பழைய,வர்த்தக,இலவச துறைமுகம் ஆகிய 3 பிரிவுகளை கொண்டது.
மேலும் 35 மில்லியன் பயணிகளை கையாளும் சர்வதேச விமான நிலையத்தையும் கொண்டது இது இசுபானியாவின் இரண்டாவது பெரிய விமான நிலையம் ஆகும். ஐரோப்பிய பிரான்ஸ் மற்றும் இசுபானியாவை இணைக்கும் உலகின் இரண்டாவது மிக நீளமான அதிவேக ரயில் பாதையின் முக்கிய மையமாக உள்ளது பொதுமக்களின் போக்குவரத்திற்காக 11 மெட்ரோ பாதைகளையும் கொண்டது. மேலும் பொது மக்கள் சாலைகளையும் கொண்டுள்ளது.
ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனத்தாரால் அறிவிக்கப்பட்ட உலகப் பாரம்பரியக் களங்கள் (பார்செலோனாவில் இருப்பவை) பின்வருமாறு:[4]
குறியெண் | பெயர் | வருடம் | ஆயத்தொலைகள் | படிமம் |
---|---|---|---|---|
320-001 | பார்க் க்வெல் | 1984 | 41°24′59.6″N 2°09′07.9″E | |
320-002 | பாலோ க்வெல் | 1984 | 41.379183°N 2.174445°E | |
320-003 | காஸா மில்லா | 1984 | 41°23′51.3″N 2°09′46.9″E | |
320-004 | காஸ விசென்ஸ் | 2005 | 41°22′50.5″N 2°10′30.6″E | |
320-005 | சாக்ரடா ஃபெமிலியா | 2005 | 41°24′19.8″N 2°10′30.2″E | |
320-006 | காசா பாட்லோ | 2005 | 41°22′00.3″N 2°09′59.0″E | |
804-001 | பாலொ டி லா மியூசிகா காடாலானா | 1997 | 41°23′16″N 2°10′30″E | |
804-002 | டி சான்ட் பாவ் மருத்துவமனை | 1997 | 41°24′50″N 2°10′30″E |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.