From Wikipedia, the free encyclopedia
பரோயே தீவுகள் (Faroe Islands) வட ஐரோப்பாவில் நோர்வே கடலுக்கும் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள தீவுக் கூட்டமொன்றாகும். ஐசுலாந்து, சுகொட்லாந்து, நோர்வே என்பவற்றிலிருந்து அண்ணளவாக சம தூரத்தில் அமைந்துள்ளது. இத்தீவுகள் 1948 ஆம் ஆண்டு முதல் டென்மார்க் இராச்சியத்தின் சுயாட்சி மாகாணமாக இருந்து வருகின்றன. இருப்பின் அண்மை ஆண்டுகளில் பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை தவிர்ந்த ஏனைய விடயங்களை தானாக தீர்மானித்து வருகின்றது. பாதுகாப்பு, சட்டவாக்கம், வெளியுறவுக் கொள்கை என்பன டென்மார்கின் பொறுப்பில் இருக்கின்றது.
பரோயே தீவுகள் Faroe Islands Føroyar Færøerne | |
---|---|
நாட்டுப்பண்: Tú alfagra land mítt You, my most beauteous land | |
தலைநகரம் | டோர்ஷான் |
பெரிய நகர் | தலைநகர் |
ஆட்சி மொழி(கள்) | பரோயே மொழி, டானிய மொழி |
மக்கள் | பரோயிகள் |
அரசாங்கம் | |
• அரசி | அரசி இரண்டாம் மாக்கிரட் |
• பிரதமர் | ஜொவானெஸ் ஐட்ஸ்கார்ட் |
சுயாட்சி மாகாணம் டென்மார்க் இராச்சியம் | |
• சுயாட்சி | ஏப்ரல் 1, 1948 |
பரப்பு | |
• மொத்தம் | 1,399 km2 (540 sq mi) (180வது) |
• நீர் (%) | 0.5 |
மக்கள் தொகை | |
• ஆகஸ்ட் 2007 மதிப்பிடு | 48 500 (214வது) |
• 2004 கணக்கெடுப்பு | 48,470 |
• அடர்த்தி | 34/km2 (88.1/sq mi) (176வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $2.2 பில்லியன் (தரமில்லை) |
• தலைவிகிதம் | $45,250 (2006 estimate) (<தரமில்லை) |
மமேசு (2006) | 0.9431 Error: Invalid HDI value · 15வது |
நாணயம் | Faroese króna² (DKK) |
நேர வலயம் | GMT |
ஒ.அ.நே+1 (EST) | |
அழைப்புக்குறி | 298 |
இணையக் குறி | .fo |
|
பரோயே தீவுகள் ஐசுலாந்து, செட்லாந்து, ஓக்னீ, வெளி ஏப்பிரைட் தீவுகள், கிறீன்லாந்து என்பவற்றுடன் நெருங்கிய காலாச்சார பிணைப்புகளைக் கொண்டுள்ளது. தீவுக் குழுமம் 1814 இல் நோர்வேயில் அரசியலிருந்து விடுபட்டது. பரேயே தீவுகள் நோர்டிக் சங்கத்தில் டென்மாக் குழுவின் அங்கத்தவராகவே பங்கேற்கின்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.