பாரிட் புந்தார்
மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். / From Wikipedia, the free encyclopedia
பாரிட் புந்தார் (Parit Buntar) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு நகரம். பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால்; மற்றும் கெடா மாநிலத்தின் பண்டார் பாரு ஆகிய நகரப் பகுதிகளுடன் எல்லையாகக் கொண்டது.
விரைவான உண்மைகள் பாரிட் புந்தார்Parit Buntar பேராக், நாடு ...
ஆள்கூறுகள்: 5°7′14″N 100°29′26″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
மாவட்டம் | கிரியான் |
உருவாக்கம் | 1800 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 26,328 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மூடு
இங்கு பெருமளவில் பெரிய நெல் வயல்கள் உள்ளன. அதன் காரணமாக இந்த மாவட்டம் பேராக்கின் அரிசிக் களஞ்சியம் என்று அழைக்கப் படுகிறது. தொடர்ந்து மழை பெய்தால் சில இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
அதனால் வெள்ளப் பகுதிகளை மீட்டு எடுப்பதற்கும்; நெல் வயல்களின் உள்ளேயும் வெளியேயும் வெள்ளப் பெருக்கைக் கட்டுப் படுத்தவும்; பெரிய அளவிலான நீர்ப்பாசன முறை நடைமுறையில் உள்ளது.