கலை (கோணம்)
From Wikipedia, the free encyclopedia
கலை அல்லது பாகைத்துளி (ஆங்கிலம்: Minute of Arc) என்பது கோணத்தின் துணை அலகாகும். இது பாகையில் அறுபதிலொருபாகம் (1⁄60) ஆகும்; மேலும் 60 விகலைகள் ஒரு கலைக்கு சமமாகும். இது (') என்ற குறியீடினால் குறிக்கப்படுவது வழக்கம். 50' என எழுதும்போது அது 50 கலை என்பதைக் குறிக்கும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓர் பாகை என்பது ஒரு வட்டத்தின் முந்நூற்று அறுபதிலொருபாகம் (1⁄360) என்றால், ஓர் கலை என்பது ஒரு வட்டத்தின் 1⁄21600 (அல்லது, ஆரையத்தில் π⁄10800) பாகம். இது மிகச்சிறிய கோணங்களுடன் தொடர்புடைய வானியல், பார்வை அளவையியல், கண்ணியல், ஒளியியல், நில அளவியல் மற்றும் மறைசுடுதல் ஆகிய துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.