பம்போர்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
பம்போர் (Pampore)[3]இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் அமைந்த புல்வாமா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும்.[4] இது மாவட்டத் தலைமையிடமான புல்வாமாவுக்கு வடக்கே 17.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான சிறிநகருக்கு தென்கிழக்கே 16.7 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து 1573 மீட்டர் உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் குங்குமப்பூ விளைச்சல் அதிகம் உள்ளது. இதனருகே சிறிநகர தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.[5]
பம்போர்
பம்பார், பன்பார் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): குங்க்குமப் பூ நகரம் | |
ஆள்கூறுகள்: 34.02°N 74.93°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மாவட்டம் |
ஜம்மு காஷ்மீர் | புல்வாமா மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | பம்போர் நகராட்சி |
ஏற்றம் | 1,573 m (5,161 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 21,680 |
மொழிகள் | |
• அலுவல் மொழி | காஷ்மீரி மொழி, உருது, இந்தி தோக்ரி மொழி, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 17 வார்டுகளும், 3,389 வீடுகளும் கொண்ட பம்போரா நகரத்தின் மக்கள் தொகை 21,680 ஆகும். அதில் ஆண்கள் 11,00 மற்றும் பெண்கள் 10,673 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 970 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 16% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 70.7% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 0 மற்றும் 69 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 0.12%, இசுலாமியர் 99.56% கிறித்தவர்கள் 0.18% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.