From Wikipedia, the free encyclopedia
பத்து காவான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu Kawan; ஆங்கிலம்: Batu Kawan Federal Constituency; சீனம்: 峇都交湾联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P046) ஆகும்.[3]
பத்து காவான் (P046) மலேசிய மக்களவைத் தொகுதி பினாங்கு | |
---|---|
Batu Kawan (P046) Federal Constituency in Penang | |
பினாங்கு மாநிலத்தில் பத்து காவான் மக்களவைத் தொகுதி | |
மாவட்டம் | தென் செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு |
வாக்காளர் தொகுதி | புக்கிட் மெர்தாஜாம் தொகுதி |
முக்கிய நகரங்கள் | பத்து காவான் |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
இதற்கு முன்னர் நடப்பில் இருந்த தொகுதி | 2022 |
மக்களவை உறுப்பினர் | சோவ் கோன் இயோவ் (Chow Kon Yeow) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 88,812[1] |
தொகுதி பரப்பளவு | 129 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
பத்து காவான் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து பத்து காவான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பத்து காவான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]
பத்து காவான் நகரம் (Batu Kawan) பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். துரிதமாக வளர்ச்சி பெற்றுவருகிறது.
இந்த நகரத்தை பினாங்கு மாநிலத்தின் பாயான் லெப்பாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகரத்தைப் போல மாற்றம் செய்வதற்கு 1990-ஆம் ஆண்டில், பினாங்கு மாநில அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக 2000-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தின் விளையாட்டு அரங்கம் (Penang State Stadium) இங்கு கட்டப்பட்டது.[5]
மேலும் ஜோர்ஜ் டவுன் தலைநகர் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் பத்து காவான் நகரத்தை, ஜோர்ஜ் டவுன் மாநகரத்தின் துணைநகரமாக மாற்றுவதற்கு பினாங்கு மாநில அரசு செயலாக்கத்தில் ஈடுபட்டு உள்ளது.
கஸ்தூரி பட்டு, (Kasthuriraani Patto), மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, எதிர்க்கட்சி அணியில் தேர்வு செய்யப் பட்ட முதல் தமிழ்ப் பெண் ஆவார். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தலில், பினாங்கு, பத்து காவான் மக்களவைத் தொகுதியில் 33,553 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[6]
கஸ்தூரி ராணிக்கு அந்த 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 42,683 வாக்குகள் (78.02%) கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரிசான் நேசனல் வேட்பாளர் ஜெயந்தி தேவி பாலகுரு (Jayanthi Devi Balaguru) என்பவருக்கு 9,130 வாக்குகள் (16.69%) கிடைத்தன.
சீனர்கள் மிகுதியாக வாழும் பத்து காவான் தொகுதியில், ஓர் இளம் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாக அறியப்படுகிறது. அந்தத் தேர்தலில் அவர் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு பதிவுபெற்ற வாக்காளர்கள் 55,479 பேர். அவர்களில் சீனர்கள் ஏறக்குறைய 62 விழுக்காட்டினர்.
2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பத்து காவான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]
சட்டமன்ற தொகுதி | தேர்தல் வட்டாரம் | குறியீடு | வாக்குச் சாவடி |
---|---|---|---|
பிறை (Perai) (N16) |
Taman Indrawasih | 046/16/01 | SMK Taman Inderawasih |
Taman Chai Leng | 046/16/02 | SJK (C) Chung Hwa 3 | |
Perai | 046/16/03 | SJK (T) Perai | |
Taman Perai | 046/16/04 | SK Khir Johari | |
Taman Supreme | 046/16/05 | SMK Prai | |
Taman Kimsar | 046/16/06 | SJK (C) Chung Hwa 3 | |
புக்கிட் தெங்கா (Bukit Tengah) (N17) |
Kampong Jawa | 046/17/01 | SJK (T) Ladang Prye |
Jalan Pengkalan | 046/17/02 | SJK (C) Peng Bin | |
Kebun Sireh | 046/17/03 | SK Kebun Sireh | |
Bukit Tengah | 046/17/04 | SJK (C) Peng Bin | |
Kuala Juru | 046/17/05 |
| |
Juru | 046/17/06 | SJK (C) True Light | |
Taman Perwira | 046/17/07 | SMK Taman Perwira | |
Taman Sejati | 046/17/08 | SJK (C) Peng Bin | |
Taman Sentul Jaya | 046/17/09 | SMK Permai Indah | |
புக்கிட் தம்பூன் (Bukit Tambun) (N18) |
Pulau Aman | 046/18/01 | SK Pulau Aman |
Batu Kawan | 046/18/02 | SMK Batu Kawan | |
Bukit Tambun | 046/18/03 | SK Bkt Tambun | |
Taman Merak | 046/18/04 | SK Taman Merak | |
Kampong Baharu | 046/18/05 | SMK Simpang Empat | |
Ladang Valdor | 046/18/06 | SJK (T) Ladang Valdor | |
Perkampungan Valdor | 046/18/07 | SMK Valdor | |
Badak Mati | 046/18/08 | SJK (C) Chong Kuang | |
Rumah Murah Valdor | 046/18/09 | SJK (C) Kampung Valdor |
பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023) | |||
---|---|---|---|
நாடாளுமன்றம் | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
பாகான் (Bagan); புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam); நிபோங் திபால் (Nibong Tebal) தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது | |||
11-ஆவது மக்களவை | 2004–2008 | உவான் செங் குவான் (Huan Cheng Guan) | பாரிசான் (கெராக்கான்) |
12-ஆவது மக்களவை | 2008–2013 | இராமசாமி பழனிச்சாமி (Ramasamy Palanisamy) | பாக்காத்தான் ஜசெக |
13-ஆவது மக்களவை | 2013–2018 | கஸ்தூரி பட்டு (Kasthuriraani Patto) | |
14-ஆவது மக்களவை | 2018–2022 | பாக்காத்தான் (ஜசெக) | |
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் | சோவ் கோன் இயோவ் (Chow Kon Yeow) |
பொது | வாக்குகள் | % |
---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) | 88,812 | - |
வாக்களித்தவர்கள் (Turnout) | 69,759 | 78.5% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) | 68,831 | 100.00% |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) | 89 | - |
செல்லாத வாக்குகள் (Rejected Ballots) | 839 | - |
பெரும்பான்மை (Majority) | 40,400 | 58.69% |
வெற்றி பெற்ற கட்சி | பாக்காத்தான் | |
Source: Results of Parliamentary Constituencies of Penang |
வேட்பாளர் | கட்சி | வாக்குப்பதிவு | % | ∆% | |
---|---|---|---|---|---|
சோவ் கோன் இயோவ் (Chow Kon Yeow) |
பாக்காத்தான் | 50,744 | 73.72% | -4.30 | |
ஓங் சியா சென் (Wong Chia Zen) |
பெரிக்காத்தான் | 10,344 | 15.03% | +15.03 | |
டான் லீ உவாட் (Tan Lee Huat) |
பாரிசான் | 7,145 | 10.38% | -6.31 | |
ஓங் சின் வென் (Ong Chin Wen) |
சபா வாரிசான் | 450 | 0.65% | +0.65 | |
லீ ஆ லியாங் (Lee Ah Liang) |
மக்கள் கட்சி | 148 | 022% | +0.22 |
நாடாளுமன்ற தொகுதி | சட்டமன்ற தொகுதிகள் | ||||||
---|---|---|---|---|---|---|---|
1955–59* | 1959–1974 | 1974–1986 | 1986–1995 | 1995–2004 | 2004–2018 | 2018–தற்போது | |
P046 பத்து காவான் |
புக்கிட் தம்பூன் | ||||||
புக்கிட் தெங்கா | |||||||
பிறை |
# | சட்டமன்ற தொகுதி | உறுப்பினர் | கூட்டணி (கட்சி) |
---|---|---|---|
N16 | பிறை (Perai) |
இராமசாமி பழனிச்சாமி | பாக்காத்தான் (ஜசெக) |
N17 | புக்கிட் தெங்கா (Bukit Tengah) |
கூய் சியோ லியூங் (Gooi Hsiao Leung) |
பாக்காத்தான் (பி.கே.ஆர்) |
N18 | புக்கிட் தம்பூன் (Bukit Tambun) |
கோ சூன் ஆயிக் (Goh Choon Aik) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.