பி. வாசு இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
பத்தினி (Paththini) என்பது 1997 ஆண்டைய இந்திய தமிழ் நாடகத் திரைப்படமாகும். இதை பி. வாசு எழுதி இயக்க, ஜெயராம் மற்றும் குஷ்பு ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க பிரகாஷ் ராஜ் மற்றும் சனகராஜ் ஆகியோர் துணை வேடங்களில்நடித்துள்ளனர். இப்படத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார். படம் 1997 செப்டம்பரில் வெளியடப்பட்டு, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[1][2]
பத்தினி | |
---|---|
இயக்கம் | பி. வாசு |
தயாரிப்பு | எம். நரேந்திரன் |
கதை | பி. வாசு |
இசை | தேவா |
நடிப்பு | ஜெயராம் (நடிகர்) குஷ்பூ பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | இரவீந்தர் |
படத்தொகுப்பு | பி. மோகனராஜ் |
கலையகம் | குட் லக் பிலிம்ஸ் |
வெளியீடு | 26 செப்டம்பர் 1997 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
1990 களின் நடுவில் பல தோல்விப் படங்களுக்குப் பிறகு, பி. வாசு வாய்மையே வெல்லும், (1997) படத்தின் வழியாக மறுபிரவேசம் செய்தார். படத்தின் வெற்றியானது அவருக்கு குட் லக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் இருந்து இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தது, பதினியை படமானது ஹாலிவுட் படமான, ஸ்லீப்பிங் வித் தி எனிமி (1991) படத்தை தழுவி எடுக்கபட்டது. 1993 ஆம் ஆண்டய வெற்றித் திரைப்படமான புருஷ லட்சணம் படத் தயாரிப்புக் குழுவினரும், இயக்குனரும், நடிகர், நடிகைகள் இப்படத்தில் மீண்டும் ஒன்றிணைந்தனர்.[3]
இபபடத்திற்கான இசையை தேவா மேற்கொண்டார்.[4][5] பாடல் வரிகளை வாலி, காளிதாசன், பிறைசூடன், வலம்புரி ஜான் ஆகியோர் எழுதினர்.
இந்த படம் 1997 செப்டம்பரில் கலவையான விமர்சனங்களுடன் வெளியானது. மேலும் எதிர்பார்த்த வசூலை ஈட்டவில்லை.[6]
இப்படம் அடுத்த ஆண்டில் தமிழக அரசின் இரண்டு விருதுகளை வென்றது - பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் சிறந்த படம் மற்றும் நடிகை குஷ்பூவுக்கு சிறப்பு பரிசு என்பவையே அவை.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.