![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Expedition_of_the_Ten_Thousand.jpg/640px-Expedition_of_the_Ten_Thousand.jpg&w=640&q=50)
பத்தாயிரம்
பாரசீகப் பேரரசின் அரியாசனத்தை அவரது சகோதரரான இரண்டாம் அர்டாக்செர்க்சிடமிருந்து கைப்பற்றுவ / From Wikipedia, the free encyclopedia
பத்தாயிரம் (Ten Thousand, பண்டைக் கிரேக்கம்: οἱ Μύριοι , ஓய் மிரியோய் ) என்பது பண்டைய கிரேக்கர்கள் அடங்கிய கூலிப்படையினர் ஆவர். இந்தப் படையைக் கொண்டு இளைய சைரஸ், பாரசீக பேரரசின் அரியாசனத்தை அவரது சகோதரர் இரண்டாம் அர்தசெர்க்சிடம் இருந்து கைப்பற்ற முயற்சித்தார். குனாக்சா போருக்கு அணிவகுத்து சென்ற அவர்கள் மீண்டும் கிரேக்கத்திற்கு (கிமு 401-399) திரும்பி வந்தனர். இப்பயணம் குறித்து அவர்களின் தலைவர்களில் ஒருவரான செனபோன் தனது படைப்பான அனாபாசிஸில் பதிவு செய்துள்ளார்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/57/Expedition_of_the_Ten_Thousand.jpg/640px-Expedition_of_the_Ten_Thousand.jpg)