மலேசிய விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர் From Wikipedia, the free encyclopedia
டத்தோ பஞ்ச் குணாளன் அல்லது பஞ்ச் குணாளன் பஞ்சாட்சரம் (பிறப்பு: 4 பெப்ரவரி 1944; இறப்பு: 15 ஆகஸ்டு 2012); (மலாய்: Punch Gunalan; ஆங்கிலம்: Punch Gunalan; சீனம்: 潘奇古納蘭) என்பவர் மலேசிய விளையாட்டுத் துறை வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற பூப்பந்து விளையாட்டு வீரர்.[1]
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | குணாளன் பஞ்சாட்சரம் Punch Gunalan Panchacharan | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | மலேசியர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | ஈப்போ, பேராக், மலேசியா | 4 பெப்ரவரி 1944|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இறப்பு | 15 ஆகத்து 2012 68) பெட்டாலிங் ஜெயா, சிலாங்கூர், மலேசியா | (அகவை|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | பூப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | ஒலிம்பிக் தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
பூப்பந்து போட்டியில் விரைந்து தாக்குவதில் (Smash) மிக வல்லவராக விளங்கிய காரணத்தினால் இவருக்குப் பஞ்ச் (Punch) என்ற சிறப்பு அடைமொழி அவரின் பெயருடன் ஒட்டிக் கொண்டது. அதுவே மலேசிய ஊடகங்கள் அவருக்கு வழங்கிய சிறப்புப் பெயராகவும் மாறியது.
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் (Southeast Asian Games); பொதுநலவாய விளையாட்டுக்கள் (Commonwealth Games); மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் (Asian Championships); ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் ஆண்கள் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவுகளில் தங்கப் பதக்கங்களைக் வென்ற ஒரே மலேசியர் எனும் பெருமை இவரையே சாரும்.[2]
பஞ்ச் குணாளன், 1960 - 1970-ஆம் ஆண்டுகளில் பூப்பந்து விளையாட்டுத் துறையில் உலக அளவில் மலேசியாவின் புகழை உயர்த்தி நிறுத்தியவர். அந்த வகையில் தேசிய பூப்பந்து ஜாம்பவான் என்று இன்றும் போற்றப் படுகிறார்.
ஆசியப் பூப்பந்து சம்மேளனத்தின் (Asian Badminton Confederation) செயலாளராகவும்; அனைத்துலகப் பூப்பந்து பேரவையின் (International Badminton Federation) தலைவராகவும் பொறுப்பு ஏற்ற பெருமையும் இவருக்கு உண்டு. மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவராக 1985 முதல் 1997 வரை பன்னிரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
1970-களின் முற்பகுதியில், பஞ்ச் குணாளனும் அவரின் நண்பர் இங் பூன் பி (Ng Boon Bee) என்பவரும் இணைந்து உலகின் முன்னணி ஆண்கள் இரட்டையர் அணியாக விளையாடி வந்தார்கள்.[3] உள்நாட்டு மக்களின் கவனத்தையும் பன்னாட்டு மக்களின் பார்வையையும் ஈர்த்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், 1970-ஆம் ஆண்டில் தங்கம்;
நான்காண்டுக்கு ஒருமுறை நடைபெறும் பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டிகளில், 1970-ஆம் ஆண்டில் தங்கம் வென்றவர்.
1998-ஆம் ஆண்டில் பொதுநலவாய விளையாட்டுக்கள் தீபத்தை, பக்கிங்காம் அரண்மனையில் இங்கிலாந்து மகாராணியார் எலிசபெத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் மிக உயரிய தகுதிப்பாட்டை இவர் பெற்று இருக்கிறார்.
ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில், 1969-ஆம் ஆண்டில் தங்கம்; வென்றனர். அவர்கள் இருவரும் 1971-ஆம் ஆண்டில், உலகப்புகழ் அனைத்து இங்கிலாந்து (All England Open Badminton Championships) பட்டத்தையும் கைப்பற்றினர்.
1970-இல் தாமஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குச் சென்றதன் மூலம் மலேசியாவை உலக அளவில் அறியச் செய்தார். 1974-இல் அனைத்து இங்கிலாந்து ஒற்றையர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இருப்பினும் இறுதி ஆட்டங்களில் உலகின் முதல்தர ஆட்டக்காரர் ரூடி அர்த்தோனோவிடம் தோல்வியுற்றார்.[4]
1960-ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நடந்த ஒரு பூப்பந்து போட்டியில் முதன் முதலாக வாகையர் பட்டத்தை வென்று பூப்பந்து துறையில் பெயர் பதித்தார்.[5]
பின்னர் 1962-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த ஆசிய இளைஞர் பூப்பந்து போட்டியில் வென்றதன் மூலமாக நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிரத் தொடங்கினார்.[6]
பத்தாண்டுகள் கழித்து 1970-ஆம் ஆண்டு எடின்பர்க் மாநகரில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதே ஆண்டில் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுகள் போட்டியில் தங்கம் வென்றார்.[7]
பின்னர் 1971-ஆம் ஆண்டில் தாமஸ் கோப்பை போட்டியில் இரட்டையர் பிரிவில் வாகையர் பட்டத்தை வென்றார். 1974-இல் நியூசிலாந்து நாட்டில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்கள் போட்டியில் தனியாள் பிரிவில் தங்கமும் இரட்டையர் பிரிவில் வெண்கலமும் வெற்றி கொண்டு தம் திறனைப் பறைசாற்றினார்.[7]
பூப்பந்து விளையாட்டுத் துறையில் இவருடைய சாதனைகளுக்கு மதிப்பளித்து 1969, 1974 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மலேசிய அரசாங்கம் இவருக்கு மலேசியாவின் சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கிச் சிறப்பு செய்தது.[7]
பூப்பந்து விளையாட்டுத் துறையில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் இவர் தம்முடைய பட்டறிவையும் விளையாட்டு நுணுக்கங்களையும் இளம் விளையாட்டாளர்களுக்குப் பயிற்றுவிக்கத் தொடங்கினார்.
மலேசிய பூப்பந்து கழகத்தின் பயிற்றுனாராகப் பணியாற்றி 1992-ஆம் ஆண்டில் தாமஸ் கோப்பையைக் கைப்பற்றும் அளவுக்கு நாட்டின் பூப்பந்து குழுவினரை உருவாக்கிய பெருமை இவரையே சாரும். அனைத்துலகப் பூப்பந்து சம்மேளனத்தின் (International Badminton Federation) (இப்போது உலகப் பூப்பந்துக் கூட்டமைப்பு - Badminton World Federation) அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார்.[8]
மலேசிய நாட்டின் புகழ்பெற்ற பூப்பந்து வீரர்களான இரசிட் சிடேக், இரசிவ் சிடேக், பூ கொக் கியாங் போன்றோர் பஞ்ச் குளாளனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் இரட்டையர்
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
ஒலிம்பிக் 1972 | ஒலிம்பியா பூங்கா, முனிச், மேற்கு ஜெர்மனி | இங் பூன் பி | ஆதி சந்திரா கிறிஸ்டியன் ஹதினாட்டா |
4–15, 15–2, 11–15 | வெள்ளி |
ஆண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
ஆசிய விளையாட்டுகள் 1970 | கிட்டிகச்சோர்ன் மைதானம், பாங்காக், தாய்லாந்து | முல்ஜாடி | 4–15, 15–3, 15–12 | தங்கம் |
ஆண்கள் இரட்டையர்
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
ஆசிய விளையாட்டுகள் 1970 | கிட்டிகச்சோர்ன் மைதானம், பாங்காக், தாய்லாந்து | இங் பூன் பி | சுஞ்சி ஓமா சொய்ச்சி தகானு |
5–15, 15–8, 15–7 | தங்கம் |
ஆண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
ஆசியப் பூப்பந்து சாம்பியன்சிப் 1969 | ரிசால் நினைவு விளையாட்டு அரங்கம், மணிலா, பிலிப்பைன்ஸ் | முல்ஜாடி | 11–15, 3–15 | 'வெள்ளி' |
ஆண்கள் இரட்டையர்
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
ஆசியப் பூப்பந்து சாம்பியன்சிப் 1969 | ரிசால் நினைவு விளையாட்டு அரங்கம், மணிலா, பிலிப்பைன்ஸ் | இங் பூன் பி | இப்பி கோஜிமா உக்கினோரி |
15–8, 5–15, 15–11 | தங்கம் |
ஆண்கள் இரட்டையர்
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
1969 | யங்கோன், மியான்மர் | உய் செங் ஹோ | தோங்சாய் போங்புல் சிங்கா சிரிபான்தெங் |
தங்கம் | |
1971 | தேசிய அரங்கம் (மலேசியா), கோலாலம்பூர், மலேசியா | இங் பூன் பி | இங் தாட் வாய் ஓ கிம் கூய் |
தங்கம் | |
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் 1973 | சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம், சிங்கப்பூர் | டோமினிக் சூங் | சங்கோப் ரத்தினசோர்ன் பண்டிட் ஜெயன் |
10–15, 15–18 | வெள்ளி |
ஆண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
1969 | யாங்கோன், மியான்மர் | சூன் அகயாபிசுட் | தங்கம் | |
1971 | தேசிய அரங்கம் (மலேசியா), கோலாலம்பூர், மலேசியா | தான் அயிக் குவாங் | 12–15, 11–15 | 'வெள்ளி |
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் 1973 | சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம் சிங்கப்பூர் | தான் அயிக் மோங் | 15–8, 15–11 | தங்கம் |
கலப்பு இரட்டையர்
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் 1973 | சிங்கப்பூர் பூப்பந்து அரங்கம் சிங்கப்பூர் | சில்வியா இங் | இயோ ஆ செங் தான் சோர் கியாங் |
15–5, 15–6 | வெண்கலம் |
ஆண்கள் இரட்டையர்
ஆண்டு | இடம் | இணையர் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|---|
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1970 | எடின்பர்க், ஸ்காட்லாந்து | இங் பூன் பி | இங் தாட் வாய் தான் சூன் ஓய் |
15–3, 15–3 | தங்கம் |
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1974 | கௌல்ஸ் அரங்கம், கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து | டோமினிக் சூங் | ராபர்ட் எஸ். மெக்கோயிக் பிரேசர் கோவ் |
17–18, 15–5, 15–7 | வெண்கலம் |
ஆண்கள் ஒற்றையர்
ஆண்டு | இடம் | எதிர்த் தரப்பு | புள்ளிகள் | முடிவு |
---|---|---|---|---|
பொதுநலவாய விளையாட்டுக்கள் 1974 | கௌல்ஸ் அரங்கம், கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து | ஜேமி பால்சன் | 15–1, 15–6 | தங்கம் |
ஆண்கள் இரட்டையர்
ஆண்கள் ஒற்றையர்
இவர் தன் தொடக்கக் கல்வியை நெகிரி செம்பிலான், சிரம்பான் கிங் ஜார்ஜ் (KGV) பள்ளியில் பெற்றார். பள்ளியின் தலைமை மாணவராக விளங்கியவர். படிப்பில் சிறந்து விளங்கினார்.
இங்கிலாந்தில் பொறியியல் பட்டம் பெற்றவர். மலேசிய மின்சாரத் துறை வாரியத்தின் உதவித் தொகையைப் பெற்று இங்கிலாந்திற்கு சென்றவர்.
பஞ்ச் குணாளனின் மனைவியின் பெயர் விஜயகுமாரி. ஒரே மகன் ரோஷன் குணாளன். இவர் எலும்பு மூட்டு மருத்துவராகச் சேவை செய்கிறார்.[9][10]
பஞ்ச் குணாளன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2012 ஆகத்து 15-ஆம் தேதி, காலை மணி 6.20-க்கு, கோலாலாம்பூர் சுபாங் ஜெயா மருத்துவமனையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 68.[11][12]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.