From Wikipedia, the free encyclopedia
பசுங்கனிகம் அல்லது பசுங்கணிகம்(த.வ) (chloroplast) என்பது தாவரங்களினதும், அல்காக்களினதும் உயிரணுக்களிலும், ஒளித்தொகுப்பை நிகழ்த்தும் ஏனைய நிலைகருவுள்ள மெய்க்கருவுயிரிகளின் உயிரணுக்களிலும் காணப்படுகின்ற நுண்ணுறுப்புக்களில் ஒன்றாகும். பச்சையவுருமணிகளே ஒளிச் சக்தியை உறிஞ்சி எடுத்து, ஒளித்தொகுப்பின் மூலம் ஒரு உயிரினம் தேவையான சக்தியைப் பெற உதவுகின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியிலிருந்து சக்தியை உறிஞ்சி நீரை ஒக்சிசனாக மாற்றி, ஐதரசன் அயன்களை ஏற்று, இவற்றிலிருந்து வரும் சக்தியை ATP மற்றும் NADPH ஆகிய மூலக்கூறுகளில் சேமிக்கின்றன. பின்னர் இம்மூலக்கூற்றுகளிலுள்ள சக்தியை கல்வின் வட்டத்தில் ஈடுபடுத்தி காபனீரொக்சைட்டை தாவரத்துக்குத் தேவைப்படும் எளிய வெல்லங்களாக மாற்றும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பச்சையுருமணிகளால் தங்களைச் சூழவிருக்கும் சூழல் நிலைமைகளுக்கேற்ற படி மாறும் ஆற்றலுள்ளது. இவை ஒளிச்செறிவுக்கேற்ற படி கலத்துக்குள் அசைந்து ஒளித்தொகுப்பை மேற்கொள்கின்றன. பச்சையுருமணிகள் சூரிய ஒளியை உறிஞ்சி ஒளித்தொகுப்பை மேற்கொள்வதற்காக அவற்றின் தைலகொய்டுகளில் பச்சையத்தை அதிக செறிவில் கொண்டுள்ளன. இப்பச்சையமும், பச்சையம் காணப்படும் பச்சையுருமணியுமே தாவரங்களுக்கும், அல்காக்களும் அவற்றுக்குரிய பச்சை நிறத்தைக் கொடுக்கின்றன.
இழைமணிகளைப் போல பச்சையுருமணிகளும் அவ்ற்றுக்குரிய டி.என்.ஏயைக் கொண்டுள்ளன. எனினும் இவை தனி உயிரினங்களல்ல. பச்சையுருமணிகளால் தனியே கலத்தை விட்டு உயிர்வாழ இயலாது. இவற்றில் காணப்படும் டி.என்.ஏ பச்சையுருமணிகளின் மூதாதையரான சயனோபக்டீரியாக்களை ஒத்த உயிரினங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது.
பச்சையுருமணியின் பரிணாமத்தை விளக்க உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இக்கோட்பாட்டின் படி மெய்க்கருவுயிரிக் கலமொன்றால் உட்கொள்ளப்பட்டு ஆனால் சமிபாட்டிலிருந்து தப்பிய ஒரு சயனோபக்டீரியாவை ஒத்த தற்போசணை நிலைக்கருவிலியிலிருந்தே பச்சையுருமணிகள் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. இழைமணியின் பரிணாமத்தை விளக்கவும் இது போன்ற உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடே பயன்படுத்தப்படுகின்றது. உள்ளுறை ஒன்றியவாழி கோட்பாடு (Endosymbiotic theory) 1905ஆம் ஆண்டு கொன்ஸ்டன்டைன் மெரிஸ்ச்கௌஸ்கி என்பவரால் வெளியிடப்பட்டது.
பச்சையுருமணிகள் சயனோபக்டீரியாக்களிலிருந்து கூர்ப்படைந்ததாகக் கருதப்படுகின்றது. சயனோபக்டீரியாக்கும் பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமையே இத்தொடர்பை உறுதிப்படுத்துகின்றது. இரண்டிலும் தைலக்கொய்ட் மென்சவ்வுகள் காணப்படுவதுடன் இரண்டிலும் குளோரோபில் a உள்ளது. பச்சையத்தின் உள் மென்சவ்வும், சயனோபக்டீரியாவின் மென்சவ்வும் ஒத்ததாக உள்ளன. இரண்டிலும் டி.என்.ஏ. உள்ளது. இரண்டிலும் நிலைக்கருவிலிகளுக்கே உரிய ரைபோசோம்கள் உள்ளன. எனவே இக்கோட்பாட்டில் அதிகளவு பொருத்தப்பாடு காணப்படுகின்றது.
சயனோபக்டீரியாக்கும், பச்சையுருமணிக்குமிடையே உள்ள ஒற்றுமைகள். |
நிலவாழ் தாவரங்களின் பச்சையுருமணிக்கள் வில்லைகளை ஒத்த வடிவுடையவை. இப்பச்சையம் 5–8 μm விட்டமும் 1-3μm தடிப்பும் உடையது. கலத்தை விடச் சிறிய அளவிலிருந்தாலும், பச்சையுருமணிக்குள் கட்டமைப்பு மிகவும் சிக்கலானது. இவற்றில் பொதுவாக மூன்று மென்சவ்வுக் கட்டமைப்புகள் உள்ளன. பச்சையுருமணிக்களிலுள்ள தைலக்கொய்ட்டுகளில் பச்சையம் காணப்படுகின்றது. தைலக்கொய்ட்டுகளின் சிக்கலான மென்சவ்வுக் கட்டமைப்பு கார்ணமாக ஒளித்தொகுப்பின் வினைத்திறன் கூட்டப்படுகின்றது. தைலக்கொய்ட்டுகளில் ஒளித்தொகுப்பின் ஒளியில் நிகழும் தாக்கம் நடைபெறுகின்றது.
அனைத்து பச்சையுருமணிகளிலும் பச்சையம் a உள்ளது. பொதுவாக பச்சையுருமணிக்கள் பச்சை நிறமாகக் காணப்பட்டாலும் சில வேறு நிறங்களிலும் காணப்படும். இதற்குக் காரணம் பச்சையம் a உடன் வேறு நிறப்பொருட்களான ஸன்தோஃபில் மற்றும் கரோட்டீன் போன்றவை காணப்படுவதாகும். இந்நிறப்பொருட்களின் நிறம் பச்சையத்தின் நிறத்தை மிகுந்து காணப்படுவதால் பச்சை நிறம் தென்படுவதில்லை. எனினும் இப்பச்சையுருமணிகளாலும் ஒளித்தொகுப்பை மேற்கொள்ள முடியும் (பச்சையமும் இருப்பதால்).
பச்சையம் a | பச்சையம் b | பச்சையம் c | பச்சையம் d மற்றும் f | ஸன்தோஃபில்கள் | α-கரோட்டீன் | β-கரோட்டீன் | ஃபைகோபிலின்கள் | |
நில வாழ் தாவரங்கள் | ||||||||
பச்சை அல்காக்கள் | ||||||||
யூக்ளீனா மற்றும் குளோராஅக்கினோபைட்டுக்கள் |
||||||||
பல்கல சிவப்பு அல்கா | ||||||||
ஒருகல சிவப்பு அல்கா | ||||||||
ஹப்டோபைட்டுக்கள் and Dinophytes |
||||||||
கிரிப்டோபைட்டுக்கள் | ||||||||
கிளௌக்கோபைட்டுக்கள் | ||||||||
சயனோபக்டீரியா |
பச்சையுருமணிக்களின் பிரதான தொழில் ஒளித்தொகுப்பாகும். ஒளித்தொகுப்பினால் சூரிய சக்தி பயன்படக் கூடிய இரசாயன சக்தியாக எளிய வெல்லங்களில் இச்செயற்பாடு மூலம் சேமிக்கப்படுகின்றது. நீரும், காபனீரொக்சைட்டும் சூரிய சக்தியைப் பயன்படுத்தி எளிய வெல்லமாகவும் ஒக்சிசனாகவும் பச்சையுருமணியில் மாற்றப்படுகின்றது. பச்சையுருமணியில் ஒளித்தொகுப்பு இரு படி முறைகளில் நடைபெறுகின்றது. முதலாவது படி ஒளித்தாக்கங்கள் எனப்படும் ஒளிச்சக்தியில் நடைபெறும் தாக்கங்களாகும். இரண்டாவது படி கல்வின் சுற்று எனப்படும் ஒளி தேவைப்படாத தாக்கங்களாகும். இவ்விரண்டு தாக்கங்களையும் ATP, NADP+ ஆகிய சக்தி சேமிப்பு மூலக்கூறுகள் இணைக்கின்றன. ஒளித்தொகுப்பில் H+ இன் கொண்டுசெல்லல் காரணமாக தைலக்கொய்ட்டுகள் அமிலத்தன்மையுடன் pH4 இல் இருப்பதுடன், ஸ்ட்ரோமா கார pH8 இல் காணப்படும். இது pH 7.3க்குக் கீழ் சென்றால் ஒளித்தொகுப்பு நிறுத்தப்படும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.