நைஜீரியா
மேற்கு ஆப்பிரிக்காவின் ஒரு நாடு / From Wikipedia, the free encyclopedia
நைசீரியா அல்லது நைசீரிய சமட்டி குடியரசு மேற்கு ஆப்பிரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். [2] இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைசர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் கடற்கரைப் பகுதி தெற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது. இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி தலைநகர் பிரதேசமான தலைநகர் அபுசா அமைந்துள்ளது. நைசீரியா உத்தியோகபூர்வமாக ஒரு சனநாயக மதச்சார்பற்ற நாடு. [3] இந்த நாட்டில் ஐநூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர்.
நைசீரியா கூட்டாட்சிக் குடியரசு Orílẹ̀-èdè Olómìnira Àpapọ̀ Naìjírìà
Republik Nijeriya جمهورية نيجيريا Republic nde Naigeria Republik Federaal bu Niiseriya | |
---|---|
குறிக்கோள்: "ஒன்றியமும் பக்தியும், அமைதியும் முன்னேற்றமும்" | |
நாட்டுப்பண்: "Arise O Compatriots, Nigeria's Call Obey" | |
தலைநகரம் | அபுசா |
பெரிய நகர் | இலேகோசு |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
பிராந்திய மொழிகள் | ஔசா, இக்குபோ, இயொரூபா |
மக்கள் | நைசீரியர் |
அரசாங்கம் | கூட்டாட்சிக் குடியரசு |
• குடியரசுத் தலைவர் | உமாரு யார்'அடுவா (PDP) |
• அநுசாரி குடியரசுத் தலைவர் | குட்லக் சானதன (PDP) |
• செனட் தலைவர் | டேவிட் மார்க் (PDP) |
• பிரதான நீதிபதி | இதுரிசு குடிகி |
விடுதலை | |
• கூற்றமும் திட்டப்படமும் | அக்டோபர் 1 1960 |
• குடியரசுக் கூற்றம் | அக்டோபர் 1 1963 |
பரப்பு | |
• மொத்தம் | 923,768 km2 (356,669 sq mi) (32ஆவது) |
• நீர் (%) | 1.4 |
மக்கள் தொகை | |
• 2005 மதிப்பிடு | 133,530,0001 (9ஆவது) |
• 2006 கணக்கெடுப்பு | 140,003,542 (Not approved & preliminary)[1] |
• அடர்த்தி | 145/km2 (375.5/sq mi) (71ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2006 மதிப்பீடு |
• மொத்தம் | $191.4 பில்லியன் (47வது²) |
• தலைவிகிதம் | $1,500 (165வது²) |
ஜினி (2003) | 43.7 மத்திமம் |
மமேசு (2007) | 0.470 Error: Invalid HDI value · 158ஆவது |
நாணயம் | நைசீரிய நைரா (₦) (NGN) |
நேர வலயம் | ஒ.அ.நே+1 (WAT) |
ஒ.அ.நே+1 (இல்லை) | |
அழைப்புக்குறி | 234 |
இணையக் குறி | .ng |
1 கணக்கெடுப்புகள் 2006க்கு முன்பு எடுக்கப்பட்டவை. மாற்றங்கள் இருக்கலாம். |
நவீனகால நைசீரியா நூற்றாண்டுகளாக பல இராச்சியங்கள் மற்றும் பழங்குடி மாநிலங்களின் தளமாக இருந்து உள்ளது. நவீன அரசு 19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் இருந்து உருவானது, 1914 இல் தென் நைசீரியா மற்றும் வடக்கு நைசீரியா ஆகியவை இணைக்கப்பட்டன. பிரித்தானிய ஆட்சியின் கீழ், மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்திய அதே சமயத்தில் பிரித்தானிய நிர்வாக மற்றும் சட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. நைசீரியா 1960 இல் சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது, 1967 முதல் 1970 வரை நாடு உள்நாட்டுப் போரில் மூழ்கியது. ஆட்சியானது சனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு இடையில் மாறியது, இந்நலை 1999 இல் நிலையான சனநாயகத்தை நாடு அடையும் வரை நிலவியது. 2011 இல் நடந்த சனாதிபதித் தேர்தலே முதன் முதலில் நியாயமாக நடந்த தேர்தலாக கருதப்பட்டது. [4]
நைசீரியா அதன் பெரிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் காரணமாக, பெரும்பாலும் "ஆபிரிக்காவின் இராட்சசன்" என அழைக்கப்படுகிறது. [5] சுமார் 184 மில்லியன் மக்களுடன், நைசீரியா ஆப்பிரிக்காவில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகின் ஏழாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. உலகின் மிக அதிகளவில் இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நைசீரியாவும் ஒன்றாகும். [6][2] இந்த நாட்டில் 500 க்கும் அதிகமான இனக்குழுக்கள் வசித்து வருவதால், இது பல நாடுகளைக் கொண்ட நாடு என கருதப்படுகிறது. நாட்டின் மூன்று பெரிய இனக்குழுக்களாக உசா, இக்போ, யுவோர் ஆகியவை உள்ளன. இந்த இனக்குழுக்கள் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளை பேசி, பல்வேறு கலாச்சாரங்களுடன் அடையாளம் காணப்படுகின்றன. [7][8] நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம். நாட்டின் தெற்கு பகுதியில் பெரும்பாலும் கிருத்தவர்கள் வாழ்கின்றனர், வடக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் உள்ளனர். நைஜீரியாவின் சிறுபான்மை பழங்குடி மக்களான இக்போ மற்றும் யொரூப மக்கள் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு காலத்தில், நைசீரியா உலகின் 20 வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது, 2014 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தென் ஆப்பிரிக்காவைத் தாண்டிச் சென்றது. [9][10] 2013 கடன்-க்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 11% ஆகும். [11] நைசீரியா உலக வங்கியால் வளர்ந்துவரும் சந்தையாகக் கருதப்படுகிறது; [12] மேலும் ஆபிரிக்க கண்டத்தில் பிராந்திய சக்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, [13][14][15] பன்னாட்டு விவகாரங்களில் ஒரு நடுத்தர சக்தியாகவும், [16][17][18][19] வளர்ந்துவரும் ஒரு உலகளாவிய சக்தியாகவும் அறியப்படுகிறது. [20][21][22] நைசீரியா MINT குழு நாடுகள் அமைப்பின் உறுப்பினராக உள்ளது, இது உலகின் அடுத்த "BRIC- பொருளாதார நாடு போன்று வளரக்கூடியதாக பரவலாக அறியப்படுகிறது. இது உலகில் மிகப்பெரிய "அடுத்த 11" பொருளாதர நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. நைசீரியா ஆபிரிக்க ஒன்றியத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும் ஐக்கிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள் மற்றும் OPEC உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களின் உறுப்பினராகவும் உள்ளது.