![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Narayani_districts.png/640px-Narayani_districts.png&w=640&q=50)
நாராயணி மண்டலம்
From Wikipedia, the free encyclopedia
நாராயணி மண்டலம் (Narayani Zone) (நேபாளி: नारायणी अञ्चलகேட்கⓘ) தெற்காசியாவின் நேபாள நாட்டின் பதினான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இம்மண்டலம் மத்திய வளர்ச்சி பிராந்தியத்தில் உள்ளது. இம்மண்டலத்தின் மேற்கே பாயும் நாராயணி ஆற்றின் பெயரால், இம்மண்டலத்திற்கு நாராயணி மண்டலம் எனப் பெயராயிற்று. இம்மண்டலத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளது. சித்வான் தேசியப் பூங்கா இம்மண்டலத்தில் உள்ளது.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a4/Narayani_districts.png/640px-Narayani_districts.png)